ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆண்களைப் போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு : தலைவர்கள் வரவேற்பு
August 12, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,ஆக.12, உச்சநீதிமன்றத்தில் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசா ரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட இந்து வாரிசுச் சட்டத்தின்படி மகனைப் போன்று மகளும் சொத்தின் சம பங்கைப் பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்குச் சம பங்கு பெறும் உரிமை உள்ளது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி, உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு வரவேற்புத் தெரிவித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூகநீதியைக் காப் பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்கது என்று கூறியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்

துணை முதல்வர்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது:

"சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்சநீதி மன்றம் பூர்வீகச் சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு'" என்று வழங் கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பால், "சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத் திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும்'" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கினை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இதயப் பூர்வமாக வரவேற்கிறேன்.

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே 1989ஆம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன் மாதிரியை கலைஞர் உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை தி.மு.க.வின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன்.

சமூகம், பொருளாதாரம், குடும்பம் என அனைத்து தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண் ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

பெண்களுக்குச் சொத்துரிமை குறித்த உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிமுக பொதுச்செயலாளரும் மாநி லங்களவை உறுப்பினருமான வைகோ வரவேற்றுள் ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

"இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட ஒரு வழக்கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக்கும் உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத் திருத்தம் சம உரிமை வழங்குகின்றது என, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு 2018 பிப்ரவரி 3 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

தற்போது இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதி செய்து, இன்று (ஆக.11) வழங்கி இருக்கின்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

மகள் எப்போதுமே அன்புக்குரிய மகள்தான், தங்களது வாழ்நாள் முழுவதும் என, நீதிபதி அருண் மிஸ்ரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது. 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து உரிமை, வாரிசு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார்.

அதன் பின்னர், 1989இல் கலைஞர் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது, பெண்களுக்குச் சொத்து உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி, நாட்டுக்கே வழிகாட்டினார். இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.

கலைஞர், பெண்கள் சம உரிமை பெற 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம், கலங்கரை விளக்க மாகத் திகழ்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

சி.பி.எம். மாநிலச் செயலாளர்

பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு என்பதை உறுதிபடுத்தியுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

"இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசு களுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசுச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. 2005-க்கு முன் னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா என்கிற கேள்வியோடு போடப் பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன. தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005இல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரி சுகளும் சமமான பங்குதாரரே என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும். பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு சமபங்கினைச் சட்டமாக்கிய மாநிலங் களில் தமிழகத்திற்கு முதன்மைப் பாத்திரம் உண்டு. 1989இல் திமுக ஆட்சி யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட் சிகளின் ஆதரவோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழலில் பூர்வீகச் சொத் துடைமையில் பெண் வாரிசுகளுக்கான சம பங்கை முன் தேதியிட்டு உறுதிப் படுத்தி இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது" இவ் வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.