ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆச்சாரியாருக்கு அய்யா பதில்! “நாங்கள் எறும்புகள் தான்”
October 10, 2020 • Viduthalai • மற்றவை

நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார். நாம் உண்மையில் எறும்பு களைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக் ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார். நம்மிடம் விஷம் இல்லை என்று தெரிந்து கொண்டார். விஷமிருப்பதாக அவர் நினைத்திருந்தால் தேள், பாம்பு என்று சொல்லியிருப்பார். திராவிடர் நிலை இத்தகு நிலையில் கீழாகப் போய் இருக்கிறது. மிக மிகத் தாழ்வான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம். தேவ - அசுர யுத்தம் வந்துவிட்டது என்கிறார் ஆச்சாரி யார். நான் மூன்று வருடங்களுக்கு முன் கூறினேன், ராம - ராவணப் போராட்டம் துவங்கிவிட்டது என்று. நாம் இராவணர்கள்; அவர்கள் இராமர் கூட்டம். நம் துரோ கிகள் எல்லாம் அனுமார்கள், விபீஷணர்கள். நாம் இப் பொழுது ஒன்றுபடவில்லையென்றால் அவர்களுக்குத் தான் வெற்றி என்று கூறினேன். இப்பொழுது ஆச்சாரி யார் தைரியமாகக் கூறுகிறார் - தேவ - அசுர யுத்தம் ஆரம்பித்துவிட்டது என்று! ஒழித்துக் கட்டி விடுவ தாகவும் கூறுகிறார். நமக்கு இனி சரித்திரத்தில் மட்டும் தான் இடமிருக்கும் என்று கூறுகிறார். நான் இரண்டாண்டு களுக்கு முன் கூறினேன். பார்ப்பனர்களை சித்திரத்தில் - அகராதியில்கூட இல்லாமல் ஒழிக்க வேண்டுமென்று கூறினேன். அப்படி இல்லையென்றால் விமோசனமில்லை.

நாளை மாநாட்டில் ஒரு தீர்மானம் போடப் போகி றேன். அதாவது; சட்டத்தின் வரம்பிற்கு எல்லைக்கு உட் பட்டு - சட்டம் எந்த அளவிற்கு இடம் அளிக்கிறதோ அந்த அளவிற்கு நீங்கள் ஆளுக்கொரு மடக்க முடியாத கத்தி வைத்துக் கொள்ளுங்கள். அது மற்றவர்களைக் குத் துவதற்காக அல்ல; ஆச்சாரியாரால் தூண்டிவிடப்பட்ட காலிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள - தற்காப்பிற்காக.

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர் களை கொன்றொழிப்பது என்பதல்ல. 4 பார்ப் பனர்கள் போனால் நாளைக்கு வேறு 4 பார்ப்பனர்கள் வருகிறார் கள். மலேரியா வந்தால் கொயினா கொடுத்தால் மலேரியா   எப்படி ஒழியும்? எனக்குத் தோன்றுவதெல்லாம் பார்ப்ப னர்கள் செல்வாக்குக்குக் காரணம் கடவுள்கள், கோயில் கள், இராமாயண, பாரத இதிகாசங்கள், மதம், சாஸ்திரங் கள் இவைதான். இவையெல்லாம் ஒழிக்கப் பட்டால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான். சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படிக் கொசு ஒழியுமோ அப்படி இந்துமதம், கடவுள், கோயில், புராணங்கள் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

- 'விடுதலை', 13.10.1952

திராவிடர் எறும்புகளும்

பிராமண நல்ல பாம்புகளும்!

8.10.1953 அன்று பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் அய்தராபாத் (டெக்கான்) திரு.பிங்கள் எஸ்.ரெட்டி அவர்களை வரவேற்ற போது, திராவிட தத்துவத்தின் அடையாளமாக இரு தாமரை மொக்குகளை கவர்னர் ஜெனரலுக்கு அளித்தார். அண்மையில் கோவையில் சென்னை முதல மைச்சர் திரு.சி.ஆர். அவர்கள் திராவிடர் கழகத்தை எறும்புகளுக்குச் சமமாக ஒப்பிட்டு எறும்புகளைப் போல் அடிக்கடி தொல்லை கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டதுபற்றி திரு.ரெட்டி அவர்கள் கூறியது.

உலகில் வாழும் உயிர்களிலே மிகவும் சுறுசுறுப்பும் கஷ்டப்பட்டு உழைக்கும் தன்மையும் வாய்ந்தது எறும்பு. அவைகளைத் துன்புறுத்தாத வரை அவை எவரையும் துன்புறுத்துவதில்லை. மிகக்கஷ்டப்பட்டு உழைக்கக் கூடிய இனத்தவர்.

திராவிடர்கள் எறும்புகள் என்றால், திராவிடம் ஒரு பெரிய - எறும்புப் புற்றுக் குன்று; அங்குள்ள பிராமணர்கள் எல்லாம் நல்ல பாம்புகள்; திரு.ராஜகோபாலாச்சாரியார் நல்ல பாம்புகளின் அரசன், அதன் மீது ஆரியக்கடவுள் மகாவிஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். 'பலவந்த மைன ஸர்ப்பமு சால சீமல சேத சிக்கி சாவடே சுமதி' எனத் தெலுங்கில் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது, மிகப் பலம் பொருந்திய நாகப்பாம்பும் எறும்புகளிடம் அகப் பட்டுக் கொண்டால் இறந்து விடுகிறது என்பதாகும். எனவே, காலம் கடப்பதற்கு முன், இந்த நல்ல பாம்புகள் எறும்புக் குன்றை (திராவிடத்தை) விட்டு வெளியேறி விடும் என நம்புகிறேன்.

- 'விடுதலை',   22.10.1958