ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியருக்குக் கடிதம்
July 12, 2020 • Viduthalai • மற்றவை

வணக்கம்,

28.6.2020 காலை 11 மணியளவில், சட்டக்கல்லூரி திரா விட மாணவர் கழகம் நடத்திய இணையதள காணொலி வாயிலாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதி என்னும் தலைப்பில் சட்டக்கல்வி மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

அதில் அவர் தன்னுடைய அனுபவத்தை பாடமாக மாணவர்களின் மத்தியில் வெளிப்படுத்தியது சமூகநீதி தெளிவின் உச்சமாக இருந்தது. மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் இருந்த அந்த உரை, அனைவருக் கும் அனைத்தும் என்பது தான் சமூகநீதி என்று தொடங் கியது. அதன் வழியே சமூகநீதி என்பது மனிதக்குலம் எல்லா நியதிகளையும் பெற்று நியாயங்களை, நீதிகளை அனுபவிக்க வேண்டும் என்பதாகும். நீதிக்கட்சி தொடங்கி, தந்தைப்பெரியாரின் சுயமரியாதை இயக்கம், 1951இன் முதல் சட்டத்திருத்தம், 1954இல் அண்ணல் அம் பேத்கர் அவர்களின் மாநிலங்களவை உரை, 1958இல் பெரியாரின் இந்திய அரசமைப்பு சட்ட எரிப்பு, அரச மைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவு, சென்னை மாகாண சங்கத் தின் தொடக்க வரலாறு, 93ஆவது சட்டத்திருத்தம், மண்டல் கமிஷன், என தொடர்ந்து தன்னுடைய வரலாற்று உரையால் அனைவரையும் தெளிவுப்படுத் தினார் நம் தலைவர் அவர்கள். மேலும் சமூகநீதி பற்றிய அடிப் படையை தெரிந்துக்கொள்ள மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்திய நூல்களாவன:

  1. வகுப்புரிமை வரலாறு ஏன்?
  2. சமூக நீதி
  3. வகுப்புவாரி உரிமை ஏன்?
  4. தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு
  5. வகுப்புவாரி உரிமையின் வரலாறும், பின்னணியும்
  6. கிரிமிலேயர் கூடாது ஏன்?
  7. இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?

இவ்வாறு பல சமூகநீதி வரலாறுகளை அள்ளித் தெளித்து மாணவர்களை செம்மைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உரையின் இறுதியில் ஆசிரியர் அவர் கள் தன் இரு கோரிக்கைகளான 1. நீட் தேர்வு ரத்து மற்றும் 2. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்துடன், அதற்காக ஆயத்தம் ஆவதற்கு அனைவரையும் ஊக்கு வித்தார். அதைச் செயலாக்குவோம்.

இப்படிக்கு,

- ஷா. நபிஷா, அரசு சட்டக்கல்லூரி, திருச்சி.

- - - - -

"ஆப்பிரிக்க நாட்டு பழமொழி ஒன்று; "மோசமான தட்பவெப்ப நிலை என்று கிடையாது; அதைச் சமாளிக் கும் கதகதப்பு மிகுந்த உடையின்மைதான் ஒரே பிரச் சினை!" என்பது அம் மொழி.

இதைச் சற்று ஆழமாக சிந்தித்தால், சூழ்நிலையைக் குறைகூறி சலிப்போ, சங்கடமோ, விரக்தியோ, வேத னையோ அடையாமல் எந்த நிலையிலும் மகிழ்ச்சியைப் பெறலாம் என்பதுதானே அதன் பொருள்?.

 ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள், பணி உறைவுகள் தானாக இறுகி விட்ட நிலைக்காக மேலை நாட்டினர் வருந்துவதில்லை; அதில் சறுக்கு விளையாட்டு விளையா டியும், சிற்பங்கள் செதுக்கியும் அந்த அனுபவங்களில் தங்களை ஈடுபடுத்தி மகிழ்கின்றனரே! அதுதானே சரி யான அணுகுமுறை?

நம் பலவீனத்தை பலமாக மாற்றி கொள்ளப் பழகு வோம்!

பள்ளம் இருக்கிறதே என்று வருந்தி செயலற்று நிற்பதை விட, அதையே ஏன் பதுங்கு குழியாக ஆக்கிப் பயன்படுத்தக்கூடாது என்ற நினைப்பு வந்தால் எந்த துன்பமும்,தொல்லையும் நமக்கில்லை.

இன்பமும் துன்பமும் மனதைப் பொறுத்துதானே!"

என்று வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 1இல்  2ஆம் பக்கத்தில் மானமிகு ஆசிரியர்  அவர்கள் எழுதியுள்ள தற்கு ஏற்ப இந்த கரோனா காலத்தில் மிக முக்கியமான தலைப்புகளில் நிகழ்சிகளை  "சூம்" காணொலி வாயிலாக  நமக்கு தருவது மிகவும் மகிழ்ச்சியானது.

படிக்கும் காலத்தில் எதையும் அரியர்ஸ் வைக்காமல், தூக்கத்தை மட்டுமே அரியர்ஸ்சாக வைத்து நமக்கு பல அரிய தகவல்களை தரும் ஆசிரியர் அய்யா அவர்கள் நமக்கு கிடைத்திட்ட தந்தை பெரியாரின் "கொள்கை புத்தகம்" (உங்களுக்கு பின்னர் யார் என்று தந்தை பெரியாரிடம் கேள்வி எழுப்பிய போது நான் எழுதிய புத்தகங்கள்தான் என்று சொன்னதற்கு ஏற்ப) என்பதில் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறோம்.

- பி.சவுந்தர்ராஜன்

- - - - -

பல்கலைக்கழக வேந்தர் உரை

மரியாதைக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் விடுதலை விளைச்சல் பெருவிழாவில் தொடர்ந்து நாவலர் அவர்களின் நூற்றாண்டு விழா உரை முடிய கருத்துரை, ஆய்வுரை, தெளிவுரை என தொடர் பொழிவு மழையாய் உரை நிகழ்வுகள் நிகழ்த்தி கழகத் தோழர் களை எழுச்சியூட்டினார்கள். மிகவும் அருமையான நிகழ்வுகளாகும்.

பொதுவாக சென்னை பெரியார் திடலில் தான் இது போன்ற அரிய நிகழ்வுகள் நடப்பதும், சென்னையில் உள்ளவர்கள் கேட்டு மகிழ்வதும் வாடிக்கையாக இருக்கும். அதனையும் கடந்து கருநாடகம், ஆந்திரம், மும்பை மற்றும் வெளிநாட்டினரும் கேட்டிடும் வகையில் "சூம்" இணையம் வழியாக கேட்கும் வாய்ப்பினைப் பெற்றோம். எல்லோரும் கேட்டு அறிவு தெளிவினை பெற்றபேறும், வினா எழுப்பும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்கின் மாபெரும் வெற்றியாகும்.

கரோனா தொற்று உலகெங்கும் பரவி ஊரடங்க வைத் துள்ள காலத்திலும் ஆசிரியர் அவர்கள் பல்கலைக் கழக மாலை நேர கருத்தரங்க ஆய்வுரையாய், பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில் அமைந்ததை எண்ணி மட்டிலா மகிழ்வடைகின்றோம்

- அ.இரா.முல்லைக்கோ, பெங்களூரு