ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியருக்குக் கடிதம்
August 16, 2020 • Viduthalai • மற்றவை

ஜாதியப் பாகுபாடு

அமெரிக்காவில் இந்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த SISCO நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினரை மிகவும் அவமானப் படுத்துவதாகவும், பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போட்ட தாகவும், அங்கு இருந்த பார்ப்பன அதிகாரிகள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது HCL நிறுவனமும் ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட வழக்கில் சிக்கியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பிசிலி நிறு வனத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பணியாளர் ஜாதி அடிப் படையில் தனது உயரதிகாரியால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவைச் சார்ந்த ஒரு சமு தாயத்தினர் அந்திராவில் என்.டி.இராமாராவ் காலத்தில் உரிய உரிமைகளைப் பெற்றதால், படித்து, மேலை நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற நிலையில் இதைப் போன்ற கொடுமைகள் நிகழ்கின்றன.

ஒரு காலத்தில் தங்கள் வீட்டில் கைகட்டி, வாய் பொத்தி நின்றவரின் மகன் படித்து, தங்கள் பிள்ளைகளுக்கு மேலதிகாரி யாக வந்ததைப் பொறுக்க முடியாத நிலையில் தான் இது ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடுமை இங்கிலாந்திலும் நடந்து, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன, ஜாதி பாகுபாடு ஒழிப்புச் சட்டம் வாயிலாக உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவின் ஜாதி நோய் இந்தியாவைக் கடந்தும், மேலை நாடுகளிலும் தற்போது பரவி வருகிறது. எனவே தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், "As long as caste in India does exit, Hindus will hardly inter-marry or no social intercourse with outsiders and if Hindus will migrate to other regions of the earth. Indian castes would become a world problem" என்று அன்று சொன்னது இன்று நிரூபணமாகி வருகிறது.

- அக்ரி. ஆறுமுகம், பெரம்பலூர்