ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியருக்குக் கடிதம் - புதிய தேசிய கல்விக்கொள்கை
August 26, 2020 • Viduthalai • மற்றவை

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.  சமீப கரோனா காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து, குறிப் பாக கல்வியில் இடஒதுக்கீடு, புதிய தேசிய கல்விக் கொள்கை-2020 பற்றி பல காணொலி கூட்டங்கள் நடத்தியும், அதன் மய்யக் கருத்துக்களை 'விடுதலை'யில் சிறப்பாக வெளியிட்டும் வருவது கண்டு மெத்த மகிழ்ச்சி.  மேலும், 18,19,20 மற்றும் 22 ஆகஸ்டு ஆகிய தேதிகளில் 'விடுதலை'யில் புதிய கல்விக் கொள்கை  -2020 சம்பந்தமான கட்டுரைகள் ஒவ்வொரு தமிழரும் ஊன்றி உணர்ந்து, உய்ய வேண்டிய நேரம் இது.  மேனாள் மாண்பமை நீதியரசர் டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்களும், சமூக நீதியரசர் டாக்டர் கி.வீரமணி அவர்களும் எழுதிய கட்டுரைகள் - ஒன்று, அரசமைப் புச் சட்டத்திற்கே முரணான தேசிய கல்விக் கொள்கை  -2020, மற்றொன்று, புதிய கல்விக் கொள்கையா?  புதிய குலக்கல்வித் திட்டமா?  என்ற ஒத்த கருத்தாழமிக்க இப் பொருண்மையில் வெளிவந்தக் கட்டுரைகள் வாயிலாக எப்படி இந்திய அரசு பன்முகத்தன்மையிலிருந்து மாறி உலகத்தோடு ஒட்ட ஒழுகின்றி செல்கிறது என்பதை எந்த ஒரு சாதாரண  மனிதனும் புரிந்து கொள்ள இய லும்.  அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிக மாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றவர்களாவர்.  காரணம் சமூக நீதியில், மனிதநேயத்தில் தலைசிறந்த மாநிலமாக நல்ல அடித்தளமிட்டதே அதற்கு காரணம்.  (நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கங்கள் வரை ஆற்றிய அற்புதமான மனிதநேயப்பணி குறிப்பாக சமூக பேரியக்கமான திராவிடர் கழகம் அதன் வழி வந்த தி.மு.க மற்ற பிற திராவிட இயக்கங்களின் தனித் தன்மை வாய்ந்த பணிகளேயாகும்).

21 ஆம் நூற்றாண்டில் பயணிக்கக்கூடிய நாம் உலக நாடுகளோடு போட்டி போட வேண்டும் என்ற கருத்தில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் அதை அடையும் இலக்குகள் மிக முக்கியம்.  பல கருத்துக்களை கூறலாம் என்றாலும் ஒரு முக்கியமான உதாரணத்தை இங்கே கூறக் கடமைப்பட்டுள்ளேன்.  அய்க்கிய நாடு களின் வளர்ச்சி திட்ட அறிக்கை-2019இல் (UNDP - United Nations Development Programmes) மனித வளர்ச்சிக் குறியீடு (Human Development Index)  என்ற ஒன்றை 189 உலக நாடுகளை வரிசைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்தியாவும் தனது மாநிலங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது.  (நன்றி:  விக்கிப்பீடியா)

மேலே கூறப்பட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களை சற்று உற்று நோக்கினால் மனித வளர்ச்சிக் குறியீடு களான 1. கல்வி,  2. வாழும் ஆயுள் காலத்திற்கான நீட்சி, 3. தனி நபர் வருமானம்  ஆகிய இம்மூன்றும் எந்த அளவில் அந்த நாடுகளில், மாநிலங்களில் வளர்ச்சி நிலையைப்பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009லிருந்து இயங்கி வரு கிறது.  இதில் அங்கம் வகிக்கக் கூடிய நாடுகள் ரஷ்யா மிக அதிகம்  என்ற அளவிலும், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா அதிகம் என்ற நிலையிலும், இந்தியா எல்லா நாடுகளுக்கும் அடிமட்டத்தில் இருப்பதும் நாம் நன்கறியலாம்.  இதே நோக்கில்  உற்றுக் கவனித்தால் இந்திய மாநிலங்களில் தென்மாநிலங்கள் கேரளா (1 ), புதுச்சேரி (7), தமிழ்நாடு (11) அதிக அளவில் வளர்ச்சி யுள்ளதையும், மய்ய மற்றும் வட மாநிலங்களான மகாராட்டிரம் (15), குஜராத் (21), ம.பி (3), உ.பி (35), பீஹார் (36) இடத்தில் நடுத்தரத்தில் இருப்பதை உணர முடிகிறது.

மேற்கூறிய தரவரிசையில் பார்த்தால் இந்தியா உலக நாடுகளளவிலும், குறிப்பாக பிரிக்ஸ்  அமைப் பிலும் போட்டி போட வேண்டும் என்பதும் வெட்ட வெளிச்சம்.  மனித வள சமத்துவமின்மை வளர்ச்சி குறியீடு 2010லிருந்து வெளியிடப்படுகிறது.   அதிலும் இந்தியா மேலும் பின்னடைவையே  அடைந்து வருவது அப்பட்டமான உண்மை.

இதைத்தாண்டி இந்தியா, மாநில அளவில் பார்ப் போமேயானால் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் நல்ல அடித்தளம் அமைத்துத் தந்த சமூகப் புரட்சியா ளர்களான மகாத்மா ஜோதிபா ஃபூலே, நாராயண குரு, சாகுமகராஜ், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில், வழிகாட்டுதலில் வளர்ந்தி ருப்பது தெரிய வருகிறது.  இதிலும் மிக முன்னேறிய நிலையிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பார்த் தால் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.  இதற்கு காரணம் தந்தை பெரியார் காட்டிய வழியில் தமிழகத்தில் நிலவும் சமூக நீதிக் கொள்கைகள், பாலியல் நீதித் தத்துவங்கள், மனித நேய சித்தாந்த அடிப்படையில் மக்களின் வளர்ச்சிப்பணிகள்  ஆக இவைகளை ஒட்டி கல்வி, அதன் வளர்ச்சி, கல்வியை வைத்து தனி நபர் வருமானம்,  அதைப்பின்பற்றிதான் வாழும் ஆயுள் கால நீட்சியெல்லாம்.  ஆகவே தமிழ்நாடு இந்தியாவில் ஓர் முன்மாதிரி மாநிலமாகத் திகழும் இவ்வேளையில் தேவையற்றவைகளை இறக்குமதி செய்து தற்போது வந்துள்ள தேசிய புதியக் கல்விக் கொள்கை-2020அய் புகுத்தினால் இன்னும் மோசமான நிலைக்குச் செல்வது தான் ஒரே வழி.  ஆகவே இந்தியா வளர நமது நாட்டில் உள்ள முன்மாதிரிகளை மேம்படுத்தி அதை நடை முறைப்படுத்துவதுதான் சாலச்சிறந்தது.  இதை சில படித்தவர்கள் கூட துணைவேந்தர்கள் வரை ஆஹா, ஓஹோ என்று பரணி பாடுகிறார்கள்.  அவர்கள் தாம் எப்படி வளர்ந்தோம், இந்தப் பணிகளுக்கு எவ்வாறு வந்தோம் என்பதை வசதியாக ஓரம் தள்ளிவிட்டு தற் போது புதிய கல்விக் கொள்கைக்கு தங்கள் விவாதங் களை முன் வைக்கிறார்கள்.  அந்தக் கருத்துக்கள் சமூக மறுமலர்ச்சிக்கான சிந்தனையை நோக்கி அமையப் பெறவில்லை என்பது எனது ஆழ்ந்த கருத்தாக பதிவு செய்ய விழைகிறேன். ஆக இந்தச் சூழலில் இப்புதிய கல்விக் கொள்கை-2020அய் முற்றிலும் மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.  அதற்கு தற்போது தமிழக அரசும், எதிர்க்கட்சித் தலை வர் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்க ளும், அவர்களோடு சிறப்பாக செயல்படும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டலில் மக்களைத் தயார்படுத்தவும், மய்ய அரசிற்கு மேலும் அழுத்தம் கொடுத்து மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்பதும் எங்களைப் போன்ற சமூக நீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர்களின் கருத்து.

இதற்கு  தொடர்ந்து தொய்வில்லா தொண்டறத்தை அரிமா நோக்கில் செயல்பட்டு வழிகாட்டிவரும் தமி ழர் தலைவர்  டாக்டர் கி.வீரமணி அவர்களின் பணி களுக்கு எமது நன்றிகள்!  வீர வணக்கங்கள்!! 

- இரண்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றிய கல்வியாளர் பேராசிரியர் நல்.இராமச்சந்திரன், தஞ்சாவூர்.