ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆக.10 முதல் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு தமிழகத்தில் அனுமதி
August 6, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக. 6- தமிழகத்தில் கரோனா பரவலால் கடந்த மார்ச் 25ஆம் தேதியிலிருந்து அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப் போது அனைத்து பகுதிகளி லும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் மூடப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் ஊரடங்கு உத்தர வில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, உடற் பயிற்சிக் கூடங்கள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்கள், கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் உடற்பயிற்சி கூடங் களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று (ஆக.5) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப் பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத் தின் சார்பில் அதன் நிர்வாகி கள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கை யைப் பரிசீலித்து, முதல்-அமைச்சர் பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சி கூடங்களை திறக்க ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சி கூடங் கள் (ஸ்டாண்ட் அலோன்), 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயது உடைய வாடிக்கையாளர்களுடன் 10ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலை யான வழிகாட்டுச் செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை அனை வரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.