ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆகாயத் தாமரைகள் மலர்ந்தால் என்னவாகும்
September 26, 2020 • Viduthalai • மற்றவை

ஆகாயத் தாமரைகள் மலர்ந்தால் என்னவாகும்?

ஆகாயத் தாமரை பார்ப்பதற்கு கவனம் ஈர்க்கும். ஆனால், மிக வேகமாக வளர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதோடு, நீரை மாசுபடுத் திக் காலப்போக்கில், நீர்நிலைகளைத் தூர்ந்துபோகவும் செய்யும். தமிழ் நாட்டில், ‘தாமரை மலர்ந்தே தீரும்' என்று சொல்லி வந்த பாஜகவினர், இன்று தங்கள் கட்சித் தலைமையக மான கமலாலயத்தில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு அளிக்கும் ராஜ வரவேற்பு எங்கே அந்தக் கட்சி, தாமரைகளுக்குப் பதிலாக ஆகாயத் தாமரைகளை வளர்க்கத் தொடங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்று கிறது.

சில மாதங்களாகத் தமிழ்நாட்டி லுள்ள கேடிகள், குற்ற வரலாறு கொண்டவர்கள் பலரும் அக்கட்சி யில் இணைந்து வருவதும் அதற்கு அக்கட்சித் தலைமை கொடுக்கும் விதவிதமான விளக்கங்களும் மோச மானவை. முதலில் தனக்கு அப்படிப் பட்ட சமூக விரோதிகளின் பின்னணி தெரியாது என்று சொன்ன அக்கட்சித் தலைமை இப்போது, அவர்கள் திருந்தி வாழ்வதற்காகக் கட்சியில் சேர முனை கிறார்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறது. குற்றவாளி களின் தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர்களை நல்வழிப்படுத்து வதற்காக சீரமைப்பு இல்லங்கள் உண்டு. ஆனால், விசாரணைக்கு முன்னரே குற்றப்பின்னணியர் களைக் கட்சியில் சேர்த்து புனிதர் களாக்கும் பணி ஒரு அரசியல் கட் சிக்கு எதற்கு?

1975-77 நெருக்கடிநிலைமை பிர கடனப்படுத்தப்பட்ட காலம். ரயில்கள் நேரத்துக்கு வருகின்றன. அலுவலகங் களில் ஊழியர்கள் வராமல் இருப்ப தில்லை. சமூக விரோதி கள் கூண் டோடு ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றெல்லாம் அரசுத் தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. கடுமை யான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நாளிதழ்கள் அரசு செ ய்திகளையே தினசரி வெளியிட நேர்ந்தது. இதை யெல்லாம் அன்றைக்கு சிறையில் இருந்த இன்றைய பாஜக தலைவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த நெருக்கடிச் சூழலின்போது இந்தியாவில் மனித உரிமைகள் கடுமையாக நசுக்கப்படுவதாகச் செய்திகள் கசிய நேர்ந்ததைக் கண்ட பல மனித உரிமைச் செயல்பா ட்டாளர்கள் இந்தியாவுக்குப் பயணித் தனர். அவர்களில் ஒருவர் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உறுப் புக் கல்லூரியான ரஸல் கல்லூரியின் பேராசிரியர் டேவிட் செல்போர்ன். அவர் நல்ல எழுத்தாளரும்கூட. தனது இந்தியப் பயணத்தைப் பற்றி அவர் எழுதிய நூல் - ‘இந்தியா மீது ஒரு கண்’ (An Eye to India) பரபரப் பாகப் பேசப்பட்டது.

இந்தியப் பயணத்தை முடித்து விட்டு பிரிட்டன் திரும்பிய பின் தொழிலாளர் கூட்டமொன்றில் இந் திய நிலைமையைப் பற்றி பேசினார் டேவிட் செல்போர்ன். “நான் இந்தியா வுக்குச் செல்லும் முன் செய்தித்தாள் களில் நெருக்கடி காலகட்டத்தில் சமூக விரோத சக்திகள் பொது வெளி களிலிருந்து அறவே ஒழிக்கப்பட்டு விட்டதாகப் படித்தேன். நான் டெல்லி மற்றும் பல நகரங்களுக்குச் சென் றேன். நகரங்களில் விசாரித்தபோது சமூக விரோத சக்திகளின் நடமாட்டம் காணப்படவில்லை. எனக்கு ஆச் சரியம் பீறிட்டது. அவர்களெல்லாம் எங்கே போனார் கள் என்று கேட் டேன். தற்போது அவர்களெல்லாம் காங் கிரஸ் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளாக மாறி விட்டார்கள் என்று கூறினார்கள்.”

டேவிட் செல்போர்ன் இப்படிச் சொல்லி முடித்தவுடன் கூட்டத்தின ரின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகியது. இதே நிலை எதிர் காலத்தில் பாஜகவிலும் உருவாவதற் குத்தான் குற்றப்பின்னணியர்களை கட்சியில் சேர்க்கும் அக்கட்சித் தலை மையின் விதவிதமான விளக்கங்கள் உதவும்.

- நன்றி: 'இந்து தமிழ் திசை'