ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அளவான உடல் வேண்டுமா
November 7, 2020 • Viduthalai • மற்றவை

அளவான உடல் வேண்டுமா? 

வைட்டமின் ’டி’ குறைபாடு உடல் பருமனுக்கு வழிவகுக்கும்

உடல் பருமனுக்கு மற்றுமொரு  காரணம் வைட்டமின் ’டி’ நொதி உடலில் குறைவது    என்று ஆய்வாளர்கள் அண் மையில்  கண்டறிந்துள்ளனர்.  வைட்டமின் ’டி’ உடலில் குறையும் போது உடலின் வளர்சிதை மாற்றச் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் எரிசக்தி அனைத்தும் கொழுப்பு களாக மாறி உடலில் பல்வேறு பகுதிகளில் படியத் துவங்குகிறது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோ லினா மாகானப் பல்கலைக்கழகத்தின் உயி ரியல் ஆய்வாளர் “ஜீப்ரா ஃபிஷ் மாடல் சோதனையைப் பயன்படுத்தி உடலின் வளர்சிதை மாற்ற ஒடுக்கம், மற்றும் சமநிலை குறித்த ஆய்வுகளை நடத்தினர். இதன் முடிவுகளை 'ஜேர்னல் ஆப் சயிண்டி பிக் ரிபோர்ட்' என்ற இதழில் வெளியிட்டு உள்ளனர். உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பான செயல்பாடு களில் வைட்டமின் டி முக்கிய பங்காற்றுகி றது. இதன்மூலம் நரம்பு மண்டலங்கள் ஆங்காங்கே உள்ள கொழுப்புகளை எரி சக்திக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இது குறித்த ஆய்வுகளை ஆய்வகத்தில் ஜீப்ராவகை மீன்களை வைத்து நடத்தினர் இதன்படி இரண்டு பிரிவு மீன்களை எடுத்து முதல் பிரிவிற்கு வைட்டமின் ’டி’  அதிகம் உள்ள உணவும் அடுத்த பிரிவிற்கு வைட்ட மின் "டி" கிடைக்காதவாறும் பார்த்துக் கொண்டனர்.

இதனடிப்படையில் வைட்டமின் ’’டி’’  அதிகம் உள்ள உணவை உட்கொண்ட மீன் களின் உடலில் பல மாற்றங்கள் தொடர்ந்து  நிகழ்ந்துகொண்டே இருந்தன. அதன் எலும்பு வளர்ச்சி, மூவகை  கொழுப்பு அமிலங்களை உடல் எடுத்துக்கொள்ளும் வேகம் (டிரைகிளிசரைட்) மற்றும் கொழுப்பை ஆற்றலாக மாற்றும் வேகம் போன்றவை அதிகரித்துள்ளன.

 மேலும் மீன்களின் உடலில் வளர்சிதை மாற்றமும் அதற்காகக் கொழுப்பை ஆற்ற லாக மாற்றும் வேகமும் அதிகரித்து  மீன் களின் உடல் வளர்ச்சி கண்டுள்ளது.

வைட்டமின் ’டி’ உணவை உட்கொள் ளாத மீன்கள் வளர்ச்சியில் மிகவும் குறை பாடு உடையவையாகவும், மற்ற மீன்களை விட 50 சதவீதம் உடல் பருமன் அதிகரித்தும் காணப்படுகின்றன. மேலும் இவற்றின் உடலில் அதிக கொழுப்பு சேமித்து வைக்கப் பட்டு உள்ளது கண்டுபிடிக்கப் பட்டது.

 மீண்டும் இதே போல் மீன் குழுக்களை மாற்றி 6 மாதம் தொடர்ந்து சோதனை நடத் தப்பட்டது.

அப்போதும் வைட்டமின் ’டி’ உணவு எடுக்காத மீன்வகைகள் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றச்செயல்பாடுகளில் அதிக குறைபாடு காணப்படுகிறது. கொழுப்புப் படிவங்களும் உடலில் அதிகம் தென்பட்டன.

இதன் அடிப்படையில் வைட்டமின் ’டி’ என்பது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் முக்கியக் காரணியாக உள்ளது, இவை கொழுப்புகளை எரிசக்தியாக மாற்றி உடலில் தேவையற்ற கொழுப்பு படிவதைத் தடுக்கிறது கொழுப்புகள் எரிக்கப்படுவதன் மூலம் உடல் வளர்ச்சி அல்லது பருமன் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இனி வருங்காலத்தில் கர்ப்பிணித் தாய் மார்கள்  வைட்டமின் ’டி’யை சரிவிகிதமாக எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவ தன் மூலம் குழந்தைகளின் உடல் எடை யைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளைச் செய்யலாம். இதுவரை உடல் பருமன் என்பது மரபு வழிக்குறைபாடு என்று கூறப் பட்டது இதன் மூலம் பொய்யாகி விட்டது என்று ஆய்வாளர் குல்மான் கூறினார்.