ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அலுவலக எழுதுபொருட்கள் அறிமுகம்
October 22, 2020 • Viduthalai • இந்தியா

சென்னை, அக். 22- மாணவர்களுக்கான எழுது பொருட்கள் தயாரிப்புகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நவ்னீத் எஜுகேஷன் லிமிடெட், ஹெச்கியூ  பிராண்டுடன் அலுவலக எழுது பொருட்கள் பிரிவில் கால் பதித்துள்ளது.

புதுமையான மற்றும் எளிமையான வடிவமைப்புகள், அற்புத மான தரம் மற்றும் வலுவான பயன்பாட்டு மதிப்பு ஆகியவற்றின் காரணமாக பணியிடங்களில் ஹெச்கியூ எழுதுபொருள் தயாரிப்புகள் பிரபலமடைந்துள்ளன. இந்தப் புதிய பிராண்டின் மூலம், புதுமையை விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நவ்னீத் ஈடேற்று கிறது. ஹெச்கியூ குறிப்பேடுகள் எழுது பொருள் தயாரிப்புகளை வழங்குகிறது, அவை ஒரு சரியான மற்றும் புத்தாக்கமான தயாரிப்பு களை விரும்பும் நிர்வாகிகளுக்கு மிகவும் சரியானவையாகத் திகழ்கின்றன. ஹெச்கியூ ஈஸி டிஸ்க் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாகும். இந்த நோட்புக்கில் ஒருவர் பக்கங்களை மையடிஸ்க் பைண்டிங்கி லிருந்து எளிதாக அகற்றி, விரும்பிய இடங்களில் அவற்றை மீண்டும் செருகுவதன் மூலம் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என இந் நிறுவன தலைமை செயல்திட்ட அலுவலர் அபிஜித்சன்யால் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் திடீர் சாலை மறியல்: 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அவலம்

நீடாமங்கலம், அக். 22- திருவாரூர் அருகே புதிதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தேசிய செடுஞ்சாலையில் நேற்று (21.10.2020) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள மேலபூவனூ ரில் கொள்முதல் செய்வதற்கான புதிய கொட்டகை அமைக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் நெல்மணிகளை அந்த இடத்தில் குவியலாக போட்டுள்ளனர். அங்கு இடம் பற்றாத நிலையில் அருகில் உள்ள திடல் மற்றும் பாலம், வீடுகளிலும் 15 ஆயிரம் நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர். மேலபூவனூரில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதாக கூறி இதுவரை பட்டியல் எழுத்தரோ, உதவியாளரோ, காவலரோ தேர்வு செய்யப்படவில்லை.

அதனால், மழையில் 15 ஆயிரம் நெல் நனைந்து முளைக்கும் நிலையில் உள்ளன. இதையடுத்து விவசாயிகள், நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் அடுத்த கொண்டியாறு பாலம் அருகே நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவலறிந்த நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன் மற்றும் அதிகாரிகள் சென்று, கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பா.ஜ.க. மூத்த தலைவர் கட்சித் தாவல்

மும்பை, அக். 22-  பா.ஜ மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. மகாராட்டி ராவில் பாஜ  ஆட்சியில் இருந்தபோது, இவர் அமைச்சராக பதவி வகித்தார். அவர் மீது  ஊழல்  குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.

இந்த நிலையில், ஏக்நாத் கட்சே தேசியவாத  காங்கிரஸ் கட்சியில்  சேரப்போவதாக சமீபத்தில் செய்திகள் வௌயாகின. இது பற்றி பா.ஜவை  சேர்ந்த  முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்  பதில் அளிக்க மறுத்து விட்டார்.  இந்நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக கட்சே நேற்று (21.10.2020) அறிவித்தார். அவர் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில்  நாளை சேருகிறார். இதை மகாராட்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவருமான ஜெயந்த் பாட்டீல் உறுதி செய்துள்ளார்.