ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரைக் கைது செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
August 18, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக. 18- கரோனா வைரஸ் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் அரசு தடையை மீறி நடந்தால் கரோனா வேக மாகப் பரவுவதோடு சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும் ஏற் படும். எனவே இந்து முன் னணியினர் தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலை களில் கரைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அரசு உத்தரவை மீறும் இந்து முன்னணியினரை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மூத்த பத்திரிக்கையாளர் வி.அன் பழகன், வழக்கறிஞர்கள் சு.குமாரதேவன், ஏ.பிரகாஷ் மற்றும் எஸ்.வெங்கடேஷ் மூலம் ரிட் மனு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத் தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

கடந்த காலங்களில் விநா யகர் சதுர்த்தி என்பது வீடு களில் சிறிய அளவில் களி மண்ணால் விநாயகர் பொம் மையை வைத்து, தின்பண்டங் களைப் படைத்து வழிபடுவது வழக்கம் என்றும், கடந்த சில ஆண்டுகளாக பெரிய அள விலான விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் பெயிண்ட், வார் னிஷ் மற்றும் இதர வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல இடங் களில் வைக்கப்பட்டு பின்பு நீர்நிலைகளில் கரைக்கப் பட்டு வருகிறது. நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் நோக்கில் மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் பலமுறை அறிவுறுத்தியும் இந்து அமைப்பினர் கேட்பதில்லை.

இந்து முன்னணி நிறுவ னர் ராமகோபாலன் காலை யில் அரசு சொன்னபடி விநா யகர் சிலைகளைக் கடலில் கரைத்து விட்டு, பின்பு மாலையில் ஊர்வலம் செல் லக்கூடாது என்று அரசு தடை விதிக்கப்பட்டுள்ள பகு திகளில் ஊர்வலமாக வலம் வருவதும், சம்பிரதாயத்திற் காக அவரையும் அவர் கூட் டத்தாரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதி வதும், பின்பு அவர்களை விடு விப்பதும் ஆண்டுக்காண்டு வாடிக்கையாக நடந்து வரு கிறது. அவர் மீது போடப் பட்ட வழக்குகளில் இன்று வரை குற்றப்பத்திரிகையினை போலீசார் தாக்கல் செய்த தில்லை.

இந்த ஆண்டு தொடக் கத்தில் கரோனா வைரஸ் பரவி மக்களின் வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாறிவிட் டது. அரசு பல கட்டுப்பாடு களை விதித்து கரோனா கிருமி பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனால் விழாக்களில் பொதுமக்கள் கூடக் கூடாது என்ற வகையில் அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் ரம்ஜான் மற்றும் பக்ரீத் தொழுகை, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பிரார்த்தனை ஆகியவை கூடாது என்று அரசு தடை விதித்தது. அதுமட்டுமின்றி பெரிய கோயில்கள், ஆடித் திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறவும் அரசு தடை விதித்தது.

கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி, நடைமுறையில் இருந்து வந்த ஊரடங்கு உத்தரவினை அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.  கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, அரசு தனது சுற்றறிக்கையில் எதிர் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங் களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதையும், பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி, தடை செய்தும் உத்தரவும் பிறப்பித் தது. ஆனால் இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் மற்றும் அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் அரசு விதித்துள்ள தடையை மீறி ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் இடங்களில் விநாயகர் சிலையை நிறுவு வோம் என்றும், அதைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போம் என்றும் பேட்டி கொடுத்துள் ளார்கள். இது சம்பந்தமாக மேற்படி நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை இயக்குந ருக்கு 14.8.2020 அன்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு மகா ராஷ்டிர மாநிலத்தில் விமரி சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வ லங்கள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட இருவரின் அறிவிப்பு தமிழ்நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவ தோடு கரோனா வைரஸ் பெருந்தொற்று மிக வேக மாகப் பரவிட வழிவகுத்து விடும். மேலும் பொதுமக்களி டம் விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு பெரிய அளவில் நன்கொடை வசூலிப்பதும் கொடுக்க மறுக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரி களை  “விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் நீங்கள் பயங் கரமான விளைவுகளை அனு பவிப்பீர்கள்” என்று மிரட்டி யும் வருகிறார்கள். இதை தடுக்க வேண்டிய அரசும் இதனை கண்டும் காணாமல் இருக்கிறது. எனவே அரசு விதித்துள்ள தடைகளை மீறி ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று பேட்டி கொடுக்கும் இந்து முன்னணியினரை முன்கூட் டியே கைது செய்து கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமலும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் நாளை விசார ணைக்கு வருகிறது.

இதேபோன்று மற்றொரு வழக்கும் திருவண்ணாமலை யைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரால் சென்னை உயர் நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்  பட்டுள்ளது.