ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரைக் கைது செய்யத் தடையில்லை :  உயர்நீதிமன்றம்
August 19, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக.19 அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரைக் கைது செய்யத் தடையில்லை என்று  உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கரோனா வைரஸ் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம், அரசுத் தடையை மீறி நடந்தால் கரோனா வேகமாகப் பரவுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். எனவே இந்து முன்னணியினர் தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அரசு உத்தரவை மீறும் இந்து முன்னணியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மூத்த பத்திரிக்கையாளர் வி.அன்ப ழகன்,  ரிட் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில்  கடந்த காலங்களில் எளிமையாக வீடுகளில் கொண்டா டப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி, சிலஆண்டுகளாக பெரிய அளவு சிலைகளை வைத்து கொண்டாடப் பட்டு சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கும், சட்ட -_ ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைவது சுட்டிக் காட் டப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவி மக்களின் வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து கரோனா கிருமி பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி செய்து வரு கிறது. இதனால் விழாக்களில் பொதுமக்கள் கூடக் கூடாது என்ற வகையில் அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் ரம்ஜான் மற்றும் பக்ரீத் தொழுகை, கிறிஸ்த வர்களின் ஈஸ்டர் பிரார்த்தனை ஆகியவை கூடாது என்று அரசு தடை விதித்தது. அதுமட்டுமின்றி பெரிய கோயில்கள், ஆடித்திருவிழா,  சித்திரைத் திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறவும் அரசு தடை விதித்தது.

கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி நடைமுறையில் இருந்து வந்த ஊரடங்கு உத்தரவினை அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.  கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அரசு தனது சுற்ற றிக்கையில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங் களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதையும், பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி தடை செய்தும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்து முன் னணி நிறுவனர் இராம கோபாலன், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியம் ஆகியோர் அரசு விதித் துள்ள தடையை மீறி ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் இடங்களில் விநா யகர் சிலையை நிறுவுவோம் என்றும், அதைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போம் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை இயக்குநருக்கு 14.08.2020 அன்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் விமரிசையாகக் கொண் டாடப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப் பட்டுள்ள நிலையில் மேற்கண்ட இருவரின் அறிவிப்பு தமிழ்நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு கரோனா வைரஸ் பெருந்தொற்று மிக வேகமாகப் பரவிட வழி வகுத்து விடும்.

மேலும் பொதுமக்களிடம் விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு, பெரிய அளவில் நன்கொடை வசூலிப் பதுடன், கொடுக்க மறுக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளை  “விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் நீங்கள் பயங்கரமான விளைவுகளை அனுபவிப்பீர்கள்" என்று மிரட்டி வருகிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய அரசும் இதனை கண்டும் காணாமல் இருக்கிறது. எனவே அரசு விதித்துள்ள தடைகளை மீறி ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் இடங் களில் விநாயகர் சிலைகளை நிறுவு வோம் என்று பேட்டி கொடுக்கும் இந்து முன்னணியினரை முன்கூட் டியே கைது செய்து கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

 இந்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்

சு. குமாரதேவன் ஆஜரானார். கோவிட் - 19 சூழலில் 1,50,000 விநாயகர் சிலை களைப் பொது இடத்தில் நிறுவுவதும் ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப் போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் பேட்டி கொடுப்பதும் அரசுக்கு சவாலாக உள்ளது என்றும், அப்படி அனுமதிப்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்து வதோடு கோவிட் 19 பரவ வழி வகுப்பதால் தடைசெய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். அரசுத் தரப்பில் அரசு பிளீடர் ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆஜராகி 14 - 08-2020 GO.418  இது சம்பந்தமாக பிறப் பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அரசு உத் தரவை மீறுவோர்மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள் ளதால் மேற்கண்ட உத்தரவை மீறு பவர்கள் மீதுஅரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கினை முடித்து வைத்தனர். இதனால் தடை உத்தரவை மீறும் இந்துத்துவ இயக் கங்கள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்தத் தடையு மில்லை.