ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அரசுக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு : முதல்வர் நாராயணசாமி
August 9, 2020 • Viduthalai • தமிழகம்

புதுச்சேரி, ஆக.9 செப்டம்பர் மாதம் வரை தொற்றின் வேகம் அதிகரிக்கும். கரோனாவை ஒழிப்பதில் அரசுக்குப் பொது மக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாரா யணசாமி தெரிவித்தார்.

புதுவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் கரோ னாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 22 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித் தார். அவர் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் தொற் றினால் பாதிக்கப்பட்டு வீடு களில் தனிமைப்படுத்தப்பட்ட வர்களைக் கண்காணிக்க 6 மருத் துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

 இந்த குழுவில் இடம் பெற் றுள்ள மருத்துவர்கள், நர்சுகள் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வருகிறார்கள். யாருக் காவது சுவாசக் கோளாறு ஏற் பட்டால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்படுகிறார்கள்.

மாநிலத்தில் தற்போது அதிகப்படியாக உமிழ்நீர் பரி சோதனை செய்யப்பட்டு வரு கிறது. முதல்-அமைச்சர் கரோனா நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் உமிழ்நீர் பரிசோதனை கிட்டுகள் வாங்க ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக் கப்பட்டுள்ளது.

புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று அதி வேக மாகப் பரவி வருகிறது.

மக்களின் ஒத்துழைப்பும் அரசுக்கு குறைந்து வருகிறது. அரசின் விதிமுறைகளை கடை பிடிப்பது இல்லை. குறிப்பாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவற்றை கடைப்பிடிப்பது இல்லை. 

நீரிழிவு, இதயநோய், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2 மாதங்களாக தொற்றின் வேகம் அதிகரித்து உள்ளது.

வருகிற 12-ஆம் தேதி பேரிடர் மேலாண்மைகுழுக் கூட்டம் நடக்க உள்ளது. அரசின் விதி முறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கா விட்டால் அதில் கடுமையான முடிவுகள் எடுக்கப்படும். தேவைப் பட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எங்களுக்கு மாநில வருவாய் பற்றி கவலை இல்லை. மக்களின் உயிர்தான் முக்கியம். மக்கள் ஒத்துழைக்கா விட்டால் அத் தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.