ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். 2020ஆம் ஆண்டு முதன்மைத் தேர்வு, 2021 தேர்வு தேதி வெளியீடு
August 18, 2020 • Viduthalai • இந்தியா

மற்ற தேர்வுத் தேதிகளும் அறிவிப்பு

புதுடில்லி,ஆக.18, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட ஆட்சிப் பணிக்கான இந்த ஆண்டு முதன்மைத் தேர்வு, 2021ஆம் ஆண்டுக்கான முதல்நிலை, முதன்மை தேர்வு களுக்கான அட்ட வணைகளை யுபிஎஸ்சி வெளியிட்டது.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.ஆர்.எஸ். உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம்  (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளை இந்தியா முழுதும் லட்சக் கணக்கான இளைஞர்கள் எழுதுவார்கள்.

இதில் முதல் நிலைத்தேர்வு (prelims), முதன்மை தேர்வு (mains), நேர்முக தேர்வு (interview) என்ற அடிப்படையில் ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.  அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.ஆர்.எஸ்.,உள்ளிட்ட முதன்மையான  குடிமைப் பணிகளுக்கு இவர்கள் அனுப்பப் படுவார்கள்.

இதுதவிர 23-க்கும் மேற்பட்ட ஆட்சிப்பணி படிப்பு களுக்கும் இது ஒன்றே தேர்வு. ஏதாவது ஒரு பட்டப்படிப்பும், பயிற்சியும் இருக்கும் யாரும் தகுந்த வயது இருக்கும் பட்சத்தில் தேர்வு எழுதலாம். 10 லட்சம் பேர் எழுதும் இந்த தேர்வுகளில் ஆண்டுக்கு சுமார் ஆயிரம்பேர் தேர்வாகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வுகள் கடந்த

மே 31 நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக மார்ச் 24 முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் 2020-க்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக அக்டோபர் 4 அன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான (2021) சிவில் தேர்வுகள் குறித்த அறிவிப்பையும், 2020ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு தேதியையும் யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான சிவில் தேர்வுக்கான முதன்மைத் தேர்வுகள் வருகிற 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஆரம்பித்து 9,10,16,17 என தொடர்ந்து 5 நாட்கள்  நடத்தப்பட உள்ளன.

இதே போன்று 2021ஆம் ஆண்டுக்கான சிவில் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 27.6.2021 அன்று நடக்கிறது. சிவில் தேர்வுக்கான முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி

2.3.2021-2021-க் கான சிவில் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதன்மைத் தேர்வு 17.9.2021 தொடங்கி 5 நாட்கள் நடக்கும்.

 இது தவிர யுபிஎஸ்சியின் மற்றத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.