ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அமெரிக்க, ஜெர்மனி நாடுகளை சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் 2 பேருக்கு நோபல் பரிசு
October 8, 2020 • Viduthalai • கழகம்

வேதியியல் துறையில் சாதனை படைத்ததற்காக தேர்வு

ஸ்டாக்ஹோம், அக். 8- வேதியிய லுக்கான நோபல் பரிசுக்கு 2 பெண் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். இதுவரை 5 பெண் விஞ்ஞானிகள் மட்டுமே இந்தத் துறையில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.

மருத்துவம், இயற்பியல், வேதி யியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர் களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு கள் வழங்கி கவுரவிக்கப் படுகிறது. உல கின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப் படுகின்றன. அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. வேதி யியல் பிரிவில் நேற்று நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந் தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார் பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ.டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசை அதிகம் வென் றவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆவர். இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த 71 விஞ்ஞானி கள் வேதியியல் பிரிவில் நோபல் பரிசை வென்றுள்ளனர். ஜெர்மனி, பிரிட்ட னைச் சேர்ந்த தலா 33 பேர் நோபல் பரிசை வென் றுள்ளனர். இதுவரை 11 ஆண்டுகளில் 183 பேருக்கு வேதியியல் பிரிவில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள் ளது. ஆனால் 1916, 1917, 1919, 1924, 1933, 1940, 1941, 1942 ஆகிய ஆண்டுகளில் முதலாம் மற்றும் 2-ம் உலகப் போர் காரணமாக நோபல் பரிசு வழங்கப்பட வில்லை.

லைனல் பாலிங் என்பவர் வேதியியல், அமைதிப்பிரிவுகளில் நோபல் பரிசு களை வென்றுள்ளார். அப்போது இந் தப் பரிசு யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படாமல் லைனல் பாலிங்குக்கு மட்டுமே வழங்கப்பட் டது. ஜான் பர்தீன் என்ற விஞ்ஞானி, இயற்பியல் பிரிவில் 2 நோபல் பரிசுகளை வென்றுள்ளார். ஒரே குடும்பத்தில் கடந்த 1935-ல் தனது 35-வது வயதில் வேதியியல் விஞ்ஞானி பிரெட் ஜோலியட் நோபல் பரிசு பெற்றார். இவர் மேரி கியூரியின் மகள் அய்ரீன் கியூரியின் கணவர் ஆவார். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேரி கியூரி, அவரது கணவர் பியூரி கியூரி, மகள் அய்ரீன் கியூரி, மருமகன் பிரட்ரிக் ஜோலியட் ஆகிய 4 பேர் நோபல் பரிசு வென்று பெருமை சேர்த்துள்ளனர். மேலும் இளம்வயதில் (35 வயது) நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பிரட்ரிக் ஜோலியட் பெற்றார்.

5 பெண்கள்

வேதியியலுக்காக இதுவரை 5 பெண்கள் மட்டுமே நோபல் பரிசை வென்றுள்ளனர். மேரி கியூரி, அவரது மகள் அய்ரீன் கியூரி, டோரத்தி குரோ பூட் ஹாட்கின், அடா யோனத், பிரான்சஸ் எச். ஆர்னால்ட் ஆகி யோர் அந்த விருதைப் பெற்றுள்ளனர். மரபணு ஆராய்ச்சி

நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக் கப் பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி பர் டவுனாவும், ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டியரும் இணைந்து மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட் டுள்ளது. இருவரும் மரபணுத் தொழில் நுட்பத்தில் சிஏஎஸ்9 எனும் மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுன்ணுயிரிகள் ஆகியவற் றின் டிஎன்ஏக்களை மாற்ற முடியும். லைஃப் சயின்ஸ் பிரிவில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சிகரமான தாக் கத்தை ஏற்படுத்த முடியும். புற்று நோய்க்குப் புதிய மருத்து வத்தையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும், நீண்ட காலமாக தீர்வு இல் லாத நோய்களையும் தீர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.