ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் ஜாதியப் பாகுபாட்டிற்கு எதிரான புதிய மனித உரிமைப் போராட்டம்
August 26, 2020 • Viduthalai • உலகம்

வாழ்வாதாரம் தேடி தாங்கள் படித்த கல்வித் தகுதியின் அடிப்படையில் அமெரிக்கா சென் றுள்ள பல லட்சம் ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டு மக்கள், இதே நாட்டிலிருந்து சென் றுள்ள உயர் ஜாதிப் பார்ப்பனர்களால் ஜாதியப் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறா£கள். தாங் கள் பணிபுரியும் இடங்களில், குறிப்பாக கணினி நிறுவனங்களில் தங்களுக்கு உயர்நிலையில் உள்ள உயர்ஜாதிப் பார்ப்பனர்களால் அவமா னப்படுத்தப்பட்டு வருகிறார்கள்; தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றைப் பெற்றிட உரிய பணி செய்திடும் ஆற்றல், தகுதி இருந்தும் உயர் ஜாதிப் பார்ப்பனர்களால் அந்த உரிமைகள் மறுக்கப் படும் நிலைமைக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று வாழ்ந்து வரும் 50 லட்சம் தென் ஆசிய மக்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றும், குடி யுரிமை பெறக்கூடிய நிலையில் இருந்தும் உயர் ஜாதிப் பார்ப்பனர்களால் அவமானப்படுத்தப் படும், உரிமை மறுக்கப்படும் நிலைக்கு ஆளாகி வருவது ஒரு சமூகப் பிரச்சினையாக உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலை குறித்து ஆய்வு செய்துள்ள சமத்துவ ஆய்வகத் திற்கும் (Equality Labs) மற்றும் அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்திற்கும் நூற்றுக்கணக்கில் புகார் கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் ஊழி யரின் ஜாதி அடையாளத்தை அறிந்து கொள் வதற்கு, அந்த ஒடுக்கப்பட்ட ஊழியரின் தோள், முதுகைத் தட்டிக் கொடுத்து, தடவிப் பார்த்து அவர் 'பூணூல்‘ போட்டுள்ளாரா என தெரிந்து கொள்ளும் பார்ப்பனர் வழக்கம், அணுகுமுறை அமெரிக்காவிலும் நீடித்து வருகிறது. கடல் தாண்டிச் செல்லுவதே பார்ப்பன தர்மத்திற்கு விரோதம் என்றிருந்தாலும் தங்களுக்கு அவசி யம் என்றால் அதை மீறி அமெரிக்கா சென் றுள்ள நிலையிலும் தங்களது ஜாதி ஆணவத் தைக் காட்டுவதில் அமெரிக்கா வாழ் இந்திய நாட்டுப் பார்ப்பனர்கள் தீவிரமாக இருக்கிறார் கள்.

பணியாற்றும் இடங்களில் ஜாதி அடிப் படையில் ஒடுக்கப்பட்ட ஊழியர்கள் பாகு பாட்டுடன் நடத்தப்படுவதை எதிர்த்து நீதி மன்றம் செல்லும் நிலையில், 'ஜாதிப் பாகுபாடு' குறித்த அமெரிக்க நாட்டுச் சட்டம் எதுவும் இல்லை என்பதால் 'இன பாகுபாட்டை (கறுப்பர்-வெள்ளையர்)' மறுத்திடும் 1964ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மனித உரிமைச் சட்டத்தின்படிதான் நடவடிக்கை எடுக்க முடிகிறது. உரிய தீர்வுகள் கிடைக்காத நிலை நீடிக்கிறது. இதனால் ஜாதிப் பாகுபாட்டு நிகழ் வுகள் அதிகரித்து வரும் நிலையில், இனப் பாகுபாட்டை எதிர்த்து நடத்தப்பட்ட மனித உரிமைப் போராட்டத்தைப் போல ஜாதி ஒழிப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்திடும் நிலைமைகள் உருவாகி வருகின்றன.

அமெரிக்காவில் நிலவிடும் இந்த அவலநிலை குறித்து ஆய்வு செய்த சமத்துவ ஆய்வகத்தின் செயல் இயக்குநர் தேன்மொழி சவுந்திரராஜன் கூறுகையில், 52 விழுக்காடு ஒடுக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்கள் தங்களது ஒடுக்கப்பட்ட ஜாதி அடையாளம் பற்றிய அச்ச உணர்வுடன் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளார். தாழ்த் தப்பட்ட ஜாதியைச் சார்ந்த குழந்தைகளில்

41 விழுக்காட்டினர் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் ஜாதிப் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறா£கள். உள்ளூர் தொழில் பணி இடங்களில் 22 விழுக் காட்டினர் பாகுபடுத்தப்படுகின்றனர். 67 விழுக் காடு ஒடுக்கப்பட்ட ஊழியர்கள்  தாங்கள் பணியாற்றும் இடங்களில் ஜாதிய பாகுபாட் டுடன் நடத்தப்படுகிறார்கள். பணியாற்றும் இடங்களில் உரிய தலைமைப் பொறுப்பிற்கு வரும் வாய்ப்பு 28 விழுக்காடு ஒடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஜாதி பாகு பாடு பற்றிய இழிவான கிண்டல், கேலிப் பேச் சுகளை தாங்கள் நேர் கொள்வதாக 59 விழுக் காடு ஒடுக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய சமூகத்தில் பல ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக நிலவி வரும் ஜாதியப் பாகுபாடு, ஜாதிய இழிவுகளை நேர்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்று முறையான தகுதியுடன் கடல் தாண்டிச் சென்று பணிபுரிந் திடும் நிலையிலும் ஜாதிய அவமானத்துடன் வாழ்ந்து வரும் அவல நிலை அதிகரித்து வருகிறது. அடக்குமுறை அதிகமாகி வரும் நிலையில் 1964ஆம் ஆண்டு கறுப்பர் இனமக்கள் நடத்திய மனித உரிமைப் போராட்டத்தைப் போன்ற ஒரு போராட்டம் ஜாதியப் பாகுபாடு, ஜாதிய இழிவை எதிர்த்து உருவாகும் நிலை தவிர்க்க இயலாது என அமெரிக்கா வாழ் சமூகச் செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

என்றைக்கு ஒழியும் இந்த ஜாதிய அடை யாளத்தினால் ஏற்படும் இழிவுப் பாகுபாடு? சிறுத்தை தனது உடலில் உள்ள புள்ளிகளைக் கூட இழந்து விடும்; பார்ப்பனர்கள் தங்களது ஜாதி ஆணவ, அடக்குமுறைகளைக் கைவிடவே மாட்டார்கள் என்பது அமெரிக்க மண்ணிலும் உறுதிப்பட்டுள்ளது.

('தி டைம்ஸ் ஆப் இந்தியா' (26.8.2020) ஆங்கில ஏட்டில் வெளிவந்த செய்தியின் அடிப்படையிலான தொகுப்பு இது. தொகுப்பாளர்: வீ.குமரேசன்)