ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அமெரிக்கத் தேர்தல்: ஒரு பார்வை
October 9, 2020 • Viduthalai • உலகம்

அமெரிக்க அய்க்கிய நாடுகள் நவம்பர் 3 ஆம் தேதியை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளது!

ஆம்! தேர்தல் நாள்!

தலைவர், துணைத்தலைவர் மற்றும் மேல்சபை, கீழ்சபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இவை நான் காண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் முதல் செவ் வாயன்று நடக்க வேண்டும். ஜனவரி 20 ஆம் நாள் நடுப் பகல் 12 மணிக்குப் புதிய தலைவர் உறுதி மொழி ஏற்பார்.

தேர்தல் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்னரே தொடங்கி யார் யார் நிற்கப் போகின்றோம் என்று அறிவிப்பார்கள். முக்கிய இரண்டு கட்சிகளான குடியரசுக் கட்சி மக்களாட்சி கட்சி வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் முதற்கட்டத் தேர்வு நிகழும். அதில் வடிகட்டி எடுக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒருவர் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர், அவருடன் போட்டியிடத் துணைத் தலைவரைத்  தேர்ந்தெடுத்து அறிவிப்பார். இவை பெரிய மாநாடுகளாக மிகவும் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு தொற்று நோயால் இணையத்திலேயே நடந்தது.

அமெரிக்கத் தலைவர், துணைத் தலைவருக்குப் போட்டியிடுபவர்கள் அமெரிக்க மண்ணில் பிறந்து, 35 வயதுள்ளவராக இருக்கவேண்டும். தொடர்ந்து 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்திருக்கவேண்டும். இரண்டு முறைக்குமேல் பதவியில் இருக்க முடியாது. முதல் தலைவர் வாசிங்டன் எந்தக் கட்சியிலும் இல் லாமல் போட்டியில்லாமல் வென்றார். இதில் என்ன பெரிய செய்தி பலருக்கும் புரியாதது என்னவென்றால், எப்படித் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதுதான். மாநில மக்கள் வாக்களிப்பர். அந்தந்த மாநிலங்களில் மிகுதியான வாக்குப் பெற்றவர்கள் என்பது தெரியும். ஆனால் அந்தந்த மாநிலங்களில் அவர்களின் கீழ்சபை, மேல்சபை எண்ணிக்கையைப் பொறுத்து தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும். கலிபோர்னியா, நியூயார்க் போன்ற பெரிய மாநிலங்களில் கீழ்சபை எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். மேல்சபை (செனட்டர் ) ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருவர்தான். மொத்தம் 538 தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள். இதில் 270 பெறுபவர்தான் வெற்றி பெற்றவராக முடியும். சென்ற தேர்தலில் திருமதி கிளிண்டன் மொத்த வாக்கு கள் 3 மில்லியன் கூடப் பெற்றும் இந்த 270 அய்  பெற முடியவில்லை! இந்த முறையும் அது மாதிரி நிகழ மிகச் சிறிய வாய்ப்புள்ளது! டிசம்பர் மாதம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்சபை உறுப்பினர்கள் தேர்தல் கல்லூரி எண்ணிக்கையை சரி பார்த்து யார் வெற்றி பெற்றார் என்று தெரிவிப்பார்கள். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பொறுப்பேற்று கொள்வார் .

இது தவிர மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு சுமார் 33 பேர் இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை தேர்தலில் நிற்பார்கள். வென்றதும் அவர்கள் 6 ஆண்டுகள் பொறுப் பில் இருப்பார்கள். இந்த முறை 35 பேர். பெரும்பாலும் 23 பேர் குடியரசுக் கட்சியினர். இதில் 4 பேர் தோற்றால் அவர்கள் பெரும்பான்மையை இழப்பார்கள்! பெரும் பான்மைதான் மிக வும் எதுவும் செய்ய முடியும். ஆகவே, ஒவ்வொரு தேர்த லும் மிகவும் முக்கிய மாகி விடுகின்றது, இப்போது 53- 47 என்று உள்ளனர்.

கீழ்சபை 435 உறுப்பினர்கள் இரண்டாண்டுக்கு ஒருமுறை அனை வரும் தேர்தலில் நிற்க வேண்டும். மக்களாட்சிக்  கட்சி தன் பெரும்பான்மை யைக் காப்பாற்றிக் கொள்ள அரும் பாடுபடுகின்றது.  இரண்டு சபைகளும் இவர்கள் கையில் வந்து, பைடன் அவர்கள் தலைவராக வந்தால்தான் நாட்டிற்கு நல்லது!

இதில் துணைத் தலைவர் கமலா ஹாரிசு, கீழ் சபை பிரமீளா ஜெயபால் தமிழ் தொடர்புள்ளவர்கள் . பிரமீளா சென்னையில் பிறந்தவர். முற்போக்குக் கருத்துள்ளவர். கீழ்சபையில் உள்ள ரோ கண்ணா மற்ற 13 பேர் கொண்ட மதமற்ற குழு உறுப்பினர் ஆவார். மலையாள அடிப்படை. ராஜா கிருட்டிணமூர்த்தி சென்னையில் பிறந்த பார்ப்பன அடிப்படை. மற்றும் பல இந்திய அடிப்படையினர் இரு கட்சிகளிலும் போட்டியிடுகின்றனர். பல பணக்கார இந்திய வழியினரும், இந்துத்துவவாதிகளும் அதிபர் டிரம்ப்பையும், குடியரசுக் கட்சியையும் ஆதரிக்கின்றனர்.பெரும்பாலான இந்திய வழி அமெரிக்கர்கள் பைடன்- ஹாரிசு  மக்களாட்சிக் கட்சியை ஆதரிக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

- சோம. இளங்கோவன்