ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அனைத்து மாநிலத்துக்கும் வாய்ப்பளிக்க ஆய்வுக் குழுவை மாற்றியமைத்திடுக!
September 23, 2020 • Viduthalai • தமிழகம்

12,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சார ஆய்வு என்ற பெயரில் திராவிட நாகரிகத்தைப் பின்னுக்குத்தள்ளி சமஸ்கிருத நாகரிகத்தை முன்னிறுத்துவதா?

16 உறுப்பினர்களில் 6 பேர் சமஸ்கிருத பண்டிதர்களா?

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சென்னை, செப்.23 12 ஆயிரம் ஆண்டு இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு உருவாக்கியுள்ள 16 உறுப் பினர்கள் கொண்ட ஆய்வுக்குழுவில் 

6 பேர் சமஸ்கிருத பண்டிதர்கள்; தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு இடமில்லை. அனைத்துப் பகுதி யினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகை யில் ஆய்வுக் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரவேற்கத்தக்கது!

இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், ‘‘தமிழறிஞர்கள் - தென்னிந்தியர்கள் - வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மைனாரிட்டிகள் - பட்டியலினத்தவர் இடம்பெறவேண்டும்'' என்று திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் கூறிய ஆலோசனையைக் கேட்ட பிறகு, ‘‘திருச்சி சிவா நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார்; இதைக் குறித்துக் கொண்டு - அந்த ஆலோசனையைப் பரிசீலிக்க வேண்டும்'' என்று சம்பந்தப் பட்ட மத்திய அமைச்சருக்கு மாநிலங்க ளவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள் உத்தரவிட்டிருப்பது வர வேற்கத்தக்கது.

தமிழர்களின் கலாச்சாரம் - ஏன், திராவிடர்களின் கலாச்சாரம், மிகத் தொன்மை வாய்ந்தது. இந்தியாவின் மிகவும் மூத்த மொழியாகத் தமிழ் செம்மொழி இருக்கிறது. ஆனால், 12 ஆயிரம் ஆண்டு இந்தியக் கலாச் சாரத்தை ஆய்வு செய்யப் போகிறோம் என்று ஒரு குழுவை அமைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு - அதில் ஒரு தமிழ றிஞரைக் கூட இடம்பெறச் செய்ய வில்லை.

‘‘தமிழ்மொழி''மீது மத்திய அரசுக்கு இருக்கும் ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது

நாட்டின் பன்முக அடையாளத்தை யும் - பண்டையத் தமிழ் - திராவிட நாகரிகத்தையும் அவமதிக்கும் எண் ணத்துடன் - தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில், 6 பேர் சமஸ்கிருத மொழியில் புலமைத் துவம் பெற்றவர்கள் என்பது, ‘‘தமிழ் மொழி''மீது மத்திய அரசுக்கு இருக்கும் ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன்

திராவிட நாகரிகத்தைப் பின்னுக்குத் தள்ளி- சரஸ்வதி ஆறு நாகரிகத்தைப் புகுத்தி- இந்தியக் கலாச்சார வரலாற்றை மாற்றி எழுதிவிட மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது! அதனால்தான் மக்களவை யில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள், ‘‘இந்தக் கமிட்டி ‘‘பன்முகத்தன் மையை இழந்துவிட்டது'' என்று குறிப் பிட்டதோடு நின்றுவிடாமல், ‘‘விந்திய மலைக்குக் கீழே ஒரு இந்தியா இல் லையா?'' என்றும் மத்திய பா.ஜ.க. அர சைப் பார்த்து ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மிகுந்த

வேதனையளிக்கிறது

கரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் - இந்தியப் பொருளாதாரம் இது வரை எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு - 23.9 சதவிகிதத் திற்குமேல் வீழ்ச்சியடைந்துவிட்ட நிலையில் - வேலை இல்லாத் திண்டாட்டம் எங்கும் தாண்டவமாடி, பல கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டுள்ள நேரத்தில்கூட - சரஸ் வதி ஆறு - வேத கால நாகரிகத்தை எப்படியாவது, தனது பெரும்பான்மை யைக் கொண்டு, திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு தனது முழு நேரத்தையும் செலவிடுவது மிகுந்த வேதனையளிக் கிறது.

அரசமைப்புச் சட்டத்திற்கே மிகப்பெரிய சவால் - அச்சுறுத்தல்!

மதத் துவேஷங்களை விதைக்கும் கலாச்சாரப் பிரச்சாரத்தின்மூலம், இந் தியாவின் பன்முகத் தன்மையோடும் - உலக நாடுகள் மதிக்கும் இந்தியாவின் பன்மொழிக் கலாச்சாரத்தோடும், ஆட்சிக்கு வந்ததிலிருந்து விபரீத விளை யாட்டை நடத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு - இந்தப் பெருமைக்குரிய மண்ணின் அரசமைப்புச் சட்டத்திற்கே மிகப்பெரிய சவாலாக - அச்சுறுத்தலாக இருப்பது கவலையளிக்கிறது.

இதுபோன்ற சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட ஆலோச¬யை, ‘‘நல்ல ஆலோசனை'' என்று பாராட்டி - அதை மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டியுள்ள மாநிலங்களவைத் தலைவரின் அறிவு ரையை, அவரும் தென்னகத்தவர் தானே என அலட்சியப்படுத்தி விடாமல் பின்பற்றி, செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கலாச்சார ஆய்வுக் குழுவை உடனடியாக

மாற்றி அமைத்திடுக!

தற்போது அமைக்கப்பட்டுள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை உடனடி யாக மாற்றி அமைத்து - ‘‘தமிழ்நாடு, தென்னிந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பட்டியலின, சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள்'' பங்கேற்கும் வகையில், புதிய குழுவினை நேர்மையான  முறை யில் நடுநிலையோடு, உடனடியாக நியமித்திட, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது அறிக் கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.