ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை உடனே பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்
October 13, 2020 • Viduthalai • அரசியல்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை,அக்.13, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப் பாவை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக, தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று (12.10.2020) வெளியிட்ட அறிக்கை:

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "அய்ந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக் கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந் தஸ்தை அளிக்க வேண்டும் என்று,  கூறியுள்ளதாக வெளி வந்துள்ள செய்திகள், தமிழக உயர்கல்வி வளர்ச் சியில், குறிப்பாக அண்ணா பல் கலைக்கழகத்தின் வளர்ச்சியில், அக்கறை கொண்டிருக்கும் அனை வருக்கும் அதிர்ச்சியைத் தரும்.

அதிமுக அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து, கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளி வராத சூழலில், ஒரு துணைவேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்? முதல்வர் பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த அனுமதி காரணமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து என்று கூறிவிட்டு, மாநில அரசும் நிதியளிக்க வேண்டும் என்று கூறி வருகிறது மத்திய அரசு. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பாதிப்பும் வராது என்று எவ்வித உத்தரவாதத் தையும் அதிகாரபூர்வமாக அளிக்க மத்திய பாஜக அரசு இன்றுவரை மறுத்து வருகிறது.

 அண்ணா பல்கலைக்கழகம், தன்னிச்சையாக எப்படி நிதி திரட் டும்? அதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகவே மாறிவிடும். அப்படியொரு அபா யத்தை, போகிற போக்கில் திட்ட மிட்டு ஒரு துணைவேந்தர் உருவாக் கியிருக்கிறார் என்றால், கல்வியைக் காவிமயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம்தான் கிடைத்ததா?

இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை ஏதோ அது தனிப்பட்ட ஒருவரின் முயற் சியாக நான் கருதவில்லை. துணை வேந்தர் - முதல்வர் பழனிசாமி - தமிழக ஆளுநர் ஆகியோர் கூட்டணியாக, எப்படியாவது அண்ணா பல்கலைக் கழகத்தின் உயர்கல்வியை, காவி மயமாக்கிடச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி நடவடிக்கையாகவே   கருத வேண்டியதிருக்கிறது.

 இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், மாநில நிதி உரிமைக்கு விரோத மாகவும், மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக, தன் னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும், 'துணைவேந்தர் எழுதி யுள்ள கடிதத்திற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உரிய அதிகார பூர்வமான உத்தரவாதம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என்றும் பிர தமருக்கு உடனடியாகக் கடிதம் எழுதி, தனது எதிர்ப்பை முதல்வர் பழனிசாமி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். 

இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் 'காவு' கொடுக்க முயலும் துணை வேந்தர் கடித விவகாரத்தில் அதிமுக அரசு கால தாமதம் இன்றி நட வடிக்கை எடுக்கவில்லையென்றால் திமுகவின் இளைஞரணி, மாண வரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்".

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.