ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
<no title>செத்துப்போன ஜனநாயகம், உறுப்பினர்கள் விதிகளின் படி செயல்பட்ட போதிலும் செவிசாய்க்காமல் மசோதாவை நிறைவேறியதாக அறிவித்த மாநிலங்களவைத் தலைவர்
October 3, 2020 • Viduthalai • இந்தியா

ஜனநாயக மரபுகளை மீறி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க ஆங்கில ஊடகம் ஒன்று மாநிலங்களவை துணைத்தலைவரிடம் கோரிக்கை வைத்திருந்தது,

இதற்கு பதில் அளித்த அவை துணைத் தலைவர்,ஹரிவன்ஷ் ”திமுக உறுப்பினர் திருச்சி சிவா,  அவருடைய இருக்கையில் தான் அமர்ந்திருந்தார். அது உண்மை தான். மேலும் அவர் வேளாண் மசோதாவில் பகுதிவாரி வாக்கெடுப்பினை கோரினார். ஆனால் அவையின் ஒழுங்கு என்பது பகுதிவாரி வாக்கெடுப்பினை போன்றே சம முக்கியத்துவம் பெற்றது” என்று கூறியுள் ளார்.

ஆனால் அங்கில நாளேடு, மாநிலங்க ளவை தொலைக்காட்சி காணொளியை 1 மணியில் இருந்து 1.26 மணி வரை ஆய்வு செய்தது.

இதில் அவைத்தலைவர் 1 மணியின் போது அவையை நீட்டித்து அறிவித்தார் துணை தலைவர். 1.26 மணி அளவில் 15 நிமிடங்கள் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. 1.10 மணி அளவில் திருச்சி சிவா பகுதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், 1.11 மணி அள வில் சி.பி.எம். கட்சியின் கே.கே. ராகேஷ், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் திருத் தங்கள் செய்யப்பட பகுதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இது, பகுதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் உறுப்பினர் கள் தங்களின் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று, அவையின் துணைத் தலைவர் வைத்த வாதத்திற்கு, முற்றிலும் வேறாக இருக்கிறது.

இன்று தன்னுடைய அறிக்கையில், அவை துணைத்தலைவர், “ சட்டத்தை நிரா கரிப்பதற்கான சட்டப்பூர்வமான தீர்மான மும், குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று ராகேஷால் நகர்த்தப்பட்ட மசோதா வும் 1.07 மணி அளவில் அவையினரின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட் டது. ராகேஷ் அவையில் தான் இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர் தன்னு டைய இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனை வீடி யோவில் நீங்கள் பார்க்கலாம். அவருடைய தீர்மானத்தையும் திருத்தங்களையும் அறி விக்க நான் அவரை அழைத்தேன். கேலரி யில் பார்த்தபோது அவர் அங்கே இல்லை என்றார்.

வீடியோவில் பார்க்கும் போது, மசோ தாவில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர் பேசிக் கொண்டிருக்கும் போது 1:11 மணி அளவில் அவர் அவருடைய இருக்கையில் இருப்பதை காட்டுகிறது. அவையினர் கொண்டு வந்த தீர்மானங் களும் கோரிக்கைகளும் புறக்கணிக்கப் பட்ட பின்னர், தேர்வு குழுவை அமைக்க வேண்டி மசோதாவின் உட்பிரிவுகள் பரிசீலனை செய்யப்பட்டது.

திருச்சி சிவா தன்னுடைய இருக்கையில் இருந்தவாறே தேர்வுக்குழுவை அமைக்க வேண்டி கோரும் தனது மசோதாவை நிறை வேற்ற பகுதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது உண்மை தான். ஆனால் அதே வீடியோவில் 01:09 மணி அளவில் ஒரு நபர் விதிமுறை புத்தகத்தை கிழித்து என் மீது வீசுவதை நீங்கள் பார்க்க முடியும். மேலும் சில உறுப்பினர்கள் என்னை சூழ்ந்து, என்னிடம் இருக்கும் ஆவணங்களை அவர்கள் பறிக்க முயன்றதும் தெரிய வரும்.

விதிகள் மற்றும் நடைமுறைகளின் படி, ஒரு பகுதிவாரி கணக்கெடுப்பு நடத்த இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று அந்த கணக்கெடுப்பிற்கான கோரிக்கை மற் றொன்று அவையின் ஒழுங்கு. துணைத் தலைவரின் அலுவலகம் மதியம் 12:56 மணி முதல் 1.57 மணி வரை சபையில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடந்தது என்று “ சம்பவ அறிக்கையை ”வெளியிட்டது. விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சில உறுப்பினர்கள் அவை தலைவரின் அதிகாரங்களை புறக்கணித்தனர். மேலும் மாநிலங்களவையின் விதிகளை வேண்டு மேன்றே இடையூறு செய்வதன் மூலம் அதனை துஷ்ப்ரயோகம் செய்தனர் என்று கூறியுள்ளார்.

ஆனால் ராகேஷ் இது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், மாநிலங்களவை உறுப்பினராக தனக்கு இருக்கும் அதிகாரங் கள், ஜனநாயகமற்ற முறையில் மறுக்கப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.  கட்டுக் கடங்காத நடத்தைகள் காரணமாக 8 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்று குறிப்பிட்டது தொடர்பாக பேசிய அவர், இது துணை தலைவரின் ஒரு சார் பினை தான் காட்டுகிறது என்று கூறினார். மேலும் செப்டம்பர் 20,2020 மாநிலங்கள வையில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகள், உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய அவை தலைவர் கூறிய எந்த காரணங்களும் உண்மையுடன் பொருந்தவில்லை என்பதையே நிருபிக் கிறது என்றும் ராகேஷ் கூறியுள்ளார்.

இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என்று வற்புறுத்திய மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ், “என்னுடைய இருக்கை எண் 92ல் இருந்து, வேளாண் மசோதாக்கள் மீது நான் வைத்த சட்டரீதியான தீர்மானத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் கூறினேன். உறுப்பினர் களின் மைக்குகள் அனைத்தும் மியூட் செய்யப்பட்டதை என்னால் உணர முடிந் தது. என்னுடைய இருக்கையில் இருந்து கொண்டு நான் மைக்குகளை அன்மியூட் செய்ய வேண்டும் என்றும் வேண்டினேன். ஆனால் அந்த கோரிக்கையும் நிராகரிக்கப் பட்டது. என்னுடைய கோரிக்கையை மறுத்த துணை தலைவர், குரல் வாக் கெடுப்பிற்கு உத்தரவிட்டார். தொடர்ச்சி யான என் கோரிக்கைகளை மறுத்துவிட்டு, என்னுடைய சட்டரீதியான தீர்மானத்திற் கான வாக்கெடுப்பினையும் பிறகு மறுத்து விட்டார். மசோதாவிற்கான தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் அவர் மறுத்துவிட்டார். இதே போன்ற கோரிக்கைகளை முன் வைத்த திருச்சி சிவா மற்றும் டேரெக் ஓ’ப்ரையனும் இதே போன்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது இருந்தது. பகுதி வாரி கணக்கெடுப்பிற்காக சிவாவும் அவருடைய இருக்கையில் இருந்து பேசினார். அவரு டைய மைக்கும் மியூட் செய்யப்பட்டிருந்தது. அவை தலைவர் என்னைப் போன்றே திருச்சி சிவாவையும் பார்க்கவில்லை என்று கூறினார் ராகேஷ்.

விவசாயிகள் மசோதாவைப் பொறுத்த வரை மிகவும் மோசமான ஒரு சூழலில் இந்திய ஜனநாயகம் சென்றுகொண்டு இருக்கிறது, உறுப்பினர்களின் பதிலைக் கூட கேட்காமல் உடனடியாக சட்டத்தை நிறைவேற்றியதுமல்லாமல் அதை நாடு முழுவதும்  கரோனா பரவல் காலத்தில் கூட உயிரை துச்சமாக மதித்து விவசாயிகள் போராட்டிக்கொண்டு இருக்கும் போது இயந்திர கதியில் குடியரசுத்தலைவரும் ஒப்புதல் கையெப்பமிட்டு அரசிதழில் சேர்த்துள்ளார். இதிலிருந்து இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல வெறும் தொழி லதிபர்களின் கைப்பாவையாக விளங்கும் அரசு என்பதை மீண்டும் உறுதிபடுத்தி யுள்ளது.