ஒற்றைப் பத்தி - டி.ஏ.இராமலிங்கம் செட்டியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

ஒற்றைப் பத்தி - டி.ஏ.இராமலிங்கம் செட்டியார்


திருப்பூரில், 1881 மே, 18 ஆம் தேதி பிறந்தவர், டி.ஏ.இராமலிங்கம் செட்டியார். இவரது தந்தை, அங்கப்ப செட்டியார், செல்வச் செழிப்பு மிக்க, பருத்தி வர்த்தகர்.


சென்னை மாநிலக் கல்லூரியில், சட்டம் பயின்று, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு தலைவராக இருந்தார். 1911 இல், சென்னை மாகா ணத்தில், கூட்டுறவு இயக்கம் பரவ பாடுபட்டார். தமிழ்நாடு கூட்டுறவு கூட்டமைப்பை நிறுவி, ‘கூட்டுறவு' என்ற இதழையும் நடத்தினார்.


கோவையில், கூட்டுறவுப் பயிற் சிப் பள்ளி, மத்தியக் கூட்டுறவு வங்கி, நகர்ப்புற வங்கி, நில வளர்ச்சி வங்கி, பால் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அச்சகம் ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில், பெரும் பங்கு வகித்தார்.


கோவை ஜில்லா போர்டு தலை வராகவும், மாநகராட்சியின் தலை வராகவும் பணியாற்றினார். 1921 இல், சென்னை மாகாண சட்டசபை உறுப் பினரானார். 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, கோவையின் முதல் எம்.பி., என்ற பெருமை பெற்றார்.


1952 பிப்., 12 ஆம் தேதி கால மானார். டி.ஏ.இராமலிங்கம் செட்டி யார் பிறந்த தினம் இன்று!


(‘தினமலர்', 18.5.2020)


மேற்கண்டவாறு திரு.டி.ஏ.இராம லிங்கம் செட்டியார்பற்றி தகவல் களைக் குறிப்பிட்டுள்ளது ‘தினமலர்.'


ஆனால், ‘தினமலரால்' மறைக் கப்பட்ட - அதனால் சொல்ல முடியாத தகவல்கள் அவரைப்பற்றி உண்டு.


தந்தை பெரியார் அவர்களால் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற (1925 நவம்பர் 22) மாகாண காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட வகுப் புரிமை தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில், (1920, திருநெல்வேலி முதல் ஒவ்வொரு ஆண்டும் காங் கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு சென்றார் என்பது கவனிக்கத்தக்கது). காங்கிரசிலிருந்து வெளியேறியபோது, தந்தை பெரியார் முயற்சியால் அங்கேயே ஒரு பார்ப்பனரல்லாதார் மாநாடு கூட்டப் பெற்றது. அப்படிக் கூட்டப்பட்ட அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்தான் இந்த கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார்!


இந்தியர்களுக்கு வரையறுக் கப்பட்ட அரசியல் சுயாட்சி வழங் குவது தொடர்பாக பிரிட்டானிய இந்திய அரசின் தலைமைச் செய லாளர் எட்வின் சாமுவேல் மாண் டேகு வைஸ்ராய் செம்ஸ்போர்டு அடங்கிய கமிஷன் சென்னை வந்தபோது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) அந்தக் குழுவிடம் ஒரு கோரிக்கை மனு வினை அளித்தது.


‘‘எல்லா வகுப்பு மக்களுக்கும் அரசு உத்தியோகங்களில் போதிய பிரதிநிதித்துவம் (Adequate Representation) இருக்கவேண்டிய அளவுக்குக் கண்டிப்பான விதிகள் அரசினரால் உருவாக்கப்படவேண் டும்.


மாநிலத்தில் உள்ள எல்லா வகுப்பினருக்கும் சமமான வாய்ப்பு கள் தரப்படவேண்டும். சம வாய்ப் புகள் கிடைக்கப்படும்வரை வாய்ப் பற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்'' என்று அந்தக் குழுவின் முன் ஆணித்தரமாக வாதாடியவர்தான் இந்த டி.ஏ.இராம லிங்கம் செட்டியார் என்பது நினை வில் இருக்கட்டும்.


‘‘சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, அரசு இலாக்காக்களில் 1922 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ஆணைப்படி நிய மனங்கள் உள்ளனவா என்று கண் டறிய சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்'' என்று 1925 பிப்ரவரி 7 ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந் தவர் யார் என்றால், இதே இராம லிங்கம் செட்டியார் - வழிமொழிந்தவர் டாக்டர் சி.நடேசனார்.


இக்கால இளைஞர்கள் இவற்றைத் தெரிந்துகொள்வார்களாக!


 - மயிலாடன்


No comments:

Post a Comment