உயிர்க் காக்கும் செவிலியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

உயிர்க் காக்கும் செவிலியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை



சென்னை, மே 25, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,


"கரோனா நோய்த் தொற்றைத்  தடுப்பதில், தொடக்கம் முதலே அலட் சியத்தையும் சுணக்கத்தையும் காட்டி வரும் எடப்பாடி திரு. பழனிசாமி அரசின் தொய்வான நடவடிக்கை களால், மேலும் மேலும் நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்டு, பாதிப்புக் கான சூழல்கள் அதிகரிப்பதுடன், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சையளித்து உயிர்காக்கும் மருத்துவத் துறையினரையும், மன உளைச்சலுக்கு ஆளாக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.


மருத்துவர்களும் செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் 395 நோயாளிகளுக்கு ஒரு ஷிஃப்ட்டில் 26 செவிலியர்கள் மட்டுமே பணிபுரியும் சூழலின் காரணமாக, அதிக வேலைப் பளுவினை சுமக்கும் கட்டாயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். அதுமட்டுமின்றி, இரவு பகல் பார்க் காமல் தொடர்ச்சியாகப் பணியாற்றும் செவிலியர்கள் குடியிருக்கும் வாடகை வீடுகளிலும் சிக்கல்கள் எழுகின்றன. அதனால் குடும்பத்தினரைப் பிரிந்து, மருத்துவமனையிலேயே தனித்திருக்க வேண்டிய நெருக்கடியும் உருவாகியுள் ளது.


செவிலியர்கள் தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாகப் போராடி வரும் நிலையில், இந்தப் பேரிடர் காலத்தில் அவர்களின் அடிப் படைத் தேவைகளைக்கூடக் கண்டு கொள்ளாமல் அரசு புறக்கணிப்பது, சிறிதும் மனிதாபிமானமற்ற செய லாகும். தொகுப்பூதிய முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள செவிலியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அவர் களின் நீண்டகாலக்  கோரிக்கையை இந்த நேரத்திலாவது கவனித்து விரைந்து நிறைவேற்றி, அவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்" என திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment