ஜூன் 3: கலைஞர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உதவி செய்து கொண்டாடவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

ஜூன் 3: கலைஞர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உதவி செய்து கொண்டாடவேண்டும்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்



சென்னை, மே 27 சென்னை ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளை மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டாட வேண் டும் என தி.மு.க.வினருக்கு அக்கட்சியின் தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளர்


இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:


வரும் ஜூன் மூன்றாம் தேதி தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர் கலைஞரின் 97 ஆவது பிறந்த நாள். இன்னும் மூன்று ஆண்டுகளில் அவரது நூற்றாண்டை கொண்டாட இருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும். கலை ஞரின் பிறந்த நாளை கொண்டாடுவது, அவரை போற்றி பாராட்டுவதற்காக மட் டுமல்ல, அவரது சாதனைகளுக்கு செலுத்தும் ‘நன்றி காணிக்கையாகவும்' கருத வேண்டும்.


1957 முதல் போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்று, 5 முறை அதாவது 19 ஆண்டுகள் முதல்வராக இருந்து தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். சாமானியர்களின் தலைவர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அவர், அனுதினமும் அப்படியே நடந்தும் காட்டியவர்.


அப்படிப்பட்ட தலைவரின் பிறந்த நாளை, மக்களின் அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்து கொண்டாடுவதே பொருத்தமாகவும், சரியானதாகவும் இருக் கும். கரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த தோடு முகக் கவசம், கிருமிநாசினி ஆகிய வற்றை திமுக சார்பில் வழங்கினோம்.


அடுத்தகட்டமாக அரிசி, பருப்பு, மளி கைப் பொருட்கள், காய்கறிகளை வழங்கி னோம். பல இடங்களில் நிதி உதவியும், உணவு பொட்டலங்களும் - வழங்கினோம்.


திமுக மாவட்டச் செயலாளர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண் டர்கள் களத்தில் நின்று மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்


கலைஞர் இருந்திருந்தால், இதைப் பார்த்துப் பரவசம் கொண்டிருப்பார். அவரே பல இடங்களில் பொருள்கள் வழங்க ஓடோடி வந்திருப்பார். அத்தகைய தலைவரின் பிறந்த நாளானஜூன் 3 ஆம் தேதி,  முகக் கவசம், கிருமிநாசினி, அரிசி பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்குதல், நிதி உதவி செய்தல், உண வளித்தல் என்று  தங்களால் முடிந்த உதவி களை திமுகவினர் செய்ய வேண்டும்.


இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment