தனி மனித இடைவெளியை பின்பற்றி மீண்டும் தொடங்கிய வாகன சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 24, 2020

தனி மனித இடைவெளியை பின்பற்றி மீண்டும் தொடங்கிய வாகன சேவை

சென்னை, மே 24- பெங்களூருவில் உள்ள ஏத்தர் மின்சார வாகன நிறுவனத் தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மய்யமும் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள நிறுவனங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் குறைந்த அளவிலான வாடிக்கையாளர் களுக்காக திறக்கப்பட்டுள்ளன,  சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க  சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள விற்பனையகங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயங்கும்.


தனி மனித இடைவெளியை பின்பற்று வதற்காக குறைவான எண்ணிக்கை யில் பணியாளர்கள் இருப்பர். விற்பனை மற்றும் சேவை மய்யத்திற்கு வரும் வாடிக்கையாளர்களும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத் தப்படுவர், விற்பனை யகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஏத்தர் 450 ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகளும் துவங்கப் பட்டுள்ளன என ஏத்தர் எனர்ஜி யின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் போகேலா   தெரிவித்துள்ளார்.


தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு


மீண்டும் தொடங்கிய தொழில் மய்யம்


மும்பை, மே 24- இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் லிமிடெட்   மற்றும் ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி கூட்டு நிறுவனமான ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட்-ன் ரஞ்சங்கானை அடிப்படையாகக் கொண்ட தனது ஆலையில், அதன் செயல்பாடுகள் மீண்டும் துவக்கியுள்ளது.


கோவிட்-19 இன் தொற்று மற்றும் பரவலில் இருந்து 3000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்க, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியதொரு விரிவான திட்டத்தை  இன் நிர்வாகம் உருவாக்கியுள்ளது மற்றும் அமல்படுத்தியுள்ளது.எனினும், மிக முக்கியமாக, ரஞ்சங்கான் தொழில கத்திற்குள் நுழையும் அனைவரது ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என்று  கோஜியா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment