முரசொலி பார்வையில்... சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை முறியடிப்பான் திராவிடக் காளை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 27, 2020

முரசொலி பார்வையில்... சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை முறியடிப்பான் திராவிடக் காளை!


பி.ஜே.பி. என்பதற்கு Brahmin Janatha Party வருணிக்கப்பட்டிடும் அளவுக்கு பிராமணத்தலைவர்கள் நிறைந்து. முட்டுகொடுத்து வளர்த்துவரும் கட்சி அது! ஜனநாயகத்துக்கு விளக்கம் தரும் போது, ஆப்ரகாம் லிங்கன், 'Democracy is a rule of the people for the people by the people' எனக் குறிப்பிட்டது போல B.J.P. is a Party of the Brahmins, for the Brahmins by the Brahmins எனப் பொருள் கொள்ளுமளவுக்கு பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் கட்சியாகும்.


பி.ஜே.பி. பிராமணர் இயக்கம் என்றால், `பாரதப் பிரதமராக ஒரு பிராமணரை ஆக்கியிருக்கலாமே; தமிழக பி.ஜே.பி.யின் தலைவராக தொடர்ந்து கிருபாநிதி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, முருகன் போன் றோர்தான் இருக்கிறார்கள் என்று கேட்டிடத் தோன்றும்! உண்மைதான்;


ஆனால் அங்கேதான் இருக்கிறது பிராமணியத்தின் சூழ்ச்சி! பொம்மலாட்டத்தில் வெளி உலகுக்கு காட்டப் படும் பொம்மைகள் இவர்கள்!


பதவி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. ஆட்டுவிப்பவன் இயக்கத்தில் ஆடிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இவர்கள்!


பிராமணர் அல்லாதார் கைகளைக் கொண்டே அவர்கள் கண்களை குத்தவைக்க அவர்கள் கடை பிடிக்கும் 'சாணக்யம்' இது! தெளிவாகச் சொல்லப் போனால் அவர்கள் பயன்படுத்தும் 'கோடரிக் காம்புகள்' அவ்வளவுதான்!


இந்த யுக்திகளை வரலாற்றில் பல நேரங்களில் பயன்படுத்தி, தங்கள் எண்ணங்களை சாதித்துக் கொண் டவர்கள் அவர்கள்! ஜாதீய ஆதிக்க முறை பிராமணர் களால் திட்டம் போட்டு திறமையாக நடத்தப்படும் சதிவேலை என்பதற்கு மராட்டிய மாவீரன் சிவாஜியின் வரலாறே சிறந்த சாட்சி!


பிஜப்பூர் சுல்தான் ஆதிக்கத்தில் இருந்து மராட்டிய விடுதலைக்கு போராடி வெற்றி கண்ட அந்த வீரமகன் தன்னை ஒரு இந்துவாக பிரகடனப்படுத்திக் கொண்டு மன்னர் பதவி ஏற்க, மராட்டிய பிராமணர்கள் விட வில்லை.


வர்ணாசிரமத்தை சுட்டிக்காட்டி, சிவாஜி மன்னர் பதவி ஏற்க ஏற்படுத்திய தடைகள், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சூழ்ச்சிகள் வரலாற்றுத் தடங்களாக பதிவாகி உள்ளன.


வரலாறு கூறுவது என்ன?


படை நடத்தி, உயிர்த் தியாகங்கள் பல செய்து, வீராவேசப் போரிட்டு குவித்த வெற்றிக்குப் பின், அந்த மாவீரனை மன்னர் பொறுப்பேற்க தடை விதித்தது பிராமணக் கூட்டம் (சித்பவன்).


பின்னர் காசியைச் சேர்ந்த பிராமணரான காகபட்டர், ஹோமம் ஒன்று நடத்தி சூத்திரனான சிவாஜியை சத்ரியனாக்கி முடிசூட்டலாம் என வழிகூறுகிறார். அதன்படி மராட்டியம் வந்து யாகம்செய்து பின்னர் முடிசூட்டுகிறார்.


பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் (அல்லது) சந்திரமோகன், நாடகத்தின் கருப் பொருளே, சூத்திரன் சிவாஜி போரிட்டு மிகப் பெரிய வெற்றி குவித்தும் மன்னராக ஆக தடை போட்ட வருணாசிரமக் கும்பலின் சூழ்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டுவதே ஆகும்!.



பிராமணர்கள் எத்தகைய சூழ்ச்சிக்காரர்கள் என்ப தற்கு காகபட்டரின் செயல்பாடே உதாரணமாகும். டாக்டர் அம்பேத்கர் காகபட்டரின்செயலுக்கு, அதாவது சூத்திரனை யாகம் நடத்தி சத்ரியனாக்கிய செயலின் பின்னால் இருந்த சூழ்ச்சியை தோலுரித்துள்ளார்.


காகபட்டரைத்தான் முற்போக்காளராகப் பார்க்க வில்லை. மராட்டியத்திலுள்ள சித்பவன் பிராமணர்கள், சூத்திரன் சிவாஜிக்கு பதவி ஏற்க தகுதியில்லைஎனக் கூறிடும் பிடிவாதம் அவர்களுக்கே எதிரானதாகிவிடும்.


சிவாஜிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அதீதமானது. அவர் எப்படியும் மன்னராகி விடுவார். அதனை எதிர்த்தாலோ, தடுத்தாலோ பிராமணர்கள், அரசின் ஆதரவை இழப்பார்கள். அப்படி ஆகக் கூடாது என்பதற்காகவும், தொடர்ந்து அரசில் பிராமண செல் வாக்கை தக்கவைக்க காகபட்டர் செய்த ஏற்பாடே, சூத்திரனை சத்ரியனாக்கி முடிசூட்டியது!


இதுதான் டாக்டர் அம்பேத்கரின் கணிப்பாக இருந்தது.


தமிழகத்தில், ஒரு காலகட்டத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் தான் காங்கிரஸ் கட்சி இருந்து வந்துள்ளது. நீதிக்கட்சி பிராமணரல்லாதோரை வெகுவாக ஈர்த்த காரணத்தாலும்; பிராமணர்களின் ஆதிக்கத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் இருந்ததாலும், காங்கிரசிலிருந்த பல பிராமணரல்லாத பிரமுகர்கள் நீதிக்கட்சியில் சேர்ந்து கொண்டிருந்தனர்.


பிராமணர் அல்லாதவர்களை காங்கிரசில் தக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டிருந் தது. அந்த நேரத்தில், ராஜாஜி, பொருளும், புகழும் பெற்றிருந்த பெரியாரை காங்கிரசுக்கு இழுத்தார். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிக மாக இருந்த வர்த்தக சமூகமான பலிஜியா நாயுடுக ளையும் கவரலாம் என்று எண்ணினார்.


நீதிக்கட்சியின் செல்வாக்கையும் குறைக்கலாம் என்று கருதியதின் காரணமாக ராஜாஜி பெரியாரை காங்கிரசில் சேர்த்தார். இவ்வாறு பெரியாருடையஅரசியல் வாழ்வு பற்றி ஆய்வு நடத்திய ஈ.சா விசுவநாதன் எழுதியுள்ளார் (திரு. முரசொலி மாறன்எழுதிய திராவிட இயக்க வரலாறு : பக்கம் 207)


இதனை ஏன் குறிப்பிட்டிருக்கிறோம் என்றால்,


எங்கெங்கு பிராமண ஆதிக்கம் இருக்கிறதோ அது காங்கிரஸ் ஆனாலும் சரி, பி.ஜே.பி.யானாலும் சரி; பிராமணிய ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்பு தலை தூக்கும் போதெல்லாம், பிராமணரல்லாதவர்களைப் பிடித்து - அவர்களைக் கொண்டே பிராமணரல்லாத சமூகத்தினருக்கு எதிர்ப்புகளை உருவாக்கி, அந்த சந்தடியிலே தாங்கள் எண்ணியதை சாதித்துக் கொள்வது பிராமணர்களின் பின்னிடும் சூழ்ச்சி வலைகளில் ஒன்று!


மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதும் முருக னும், தமிழிசையும், பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்களாக நியமிக்கப்படுவதும் இந்த சூழ்ச்சிகளின் பின்னணியில்தான்!


மத்திய அமைச்சரவையை எடுத்துக் கொள்ளுங்கள்... மோடி பிரதமராக இருந்தாலும் கேபினட் அந்தஸ்துடன் பதவி ஏற்ற 23 பேரில் 9 பேர் பிராமணர்கள்.


உள்துறை, வெளியுறவுத் துறை, நிதித் துறை, சட்டத் துறை, சாலை போக்குவரத்துத் துறை போன்ற முக்கிய துறைகள் பிராமணர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன! இந்த 9 பிராமணர்கள் தேர்வு, அந்தஇன மக்கள், பி.ஜே. பி.க்கு அளித்த பலமான ஆதரவுக்கு அளிக்கப்பட்ட பரிசாகவே கருதப்படுவதாகஆங்கில நாளிதழ் ` தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்திவெளியிட்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது!


அதேபோல,


தமிழக கமலாலயத்தில் தலைமைப் பொறுப்பில் முருகன் முன்னிறுத்தப்பட்டாலும் அவரை பின்னிருந்து இயக்குவது, எச்.ராஜா, இல.கணேசன், குருமூர்த்தி, ராகவன், நாராயணன், எஸ்.ஆர்.சேகர் போன்ற பிராமணர்கள்தானே!


இந்தக் கூட்டத்தில் பலரை ஊடகங்களின் விவாத மேடைகளில் பார்த்திருக்கலாம்! இவர்கள் பா.ஜ.க. என்று வெளிப்படுத்திக் கொள்பவர்கள். இவர்களின் அணியில் நடுநிலையாளர் போர்வையில் பத்ரி சேஷாத்திரி, சிறீராம் சேஷாத்திரி, கோலகலா சீனிவாஸ், சத்யகுமார் என்போர் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக, அது மக்களுக்கு இழைத்த அநீதிகளையும் நியாயப்படுத்தி வருவதையும் பலர் பார்த்து இருக்கக் கூடும்.


தமிழ் பிராமணர்கள் கூட்டம் ஒன்று கேரளத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரரேஸ் பங்கேற்று பேசிய போது,`


பிராமணர்கள், என்பவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினைகள் காரணமாக இருமுறை பிறந்தவர்கள். தூய்மை, நேர்மை, உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள் என்றெல்லாம் பேசி, அவர்களுக்கு சில ஆலோசனை களை வழங்கினார்.


ஆனால் ஊடகங்களில் அமர்ந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு, உண்மைகளை மறைத்து துவேஷப் பிரச்சாரம் செய்யும் பிராமணர்கள்தான் தூய்மை, நேர்மை, உயர்ந்த சிந்தனை கொண்டவர்களா?


உதாரணத்துக்கு பலவற்றை சுட்டிக்காட்ட இயலும் என்றாலும், ஒன்றிரண்டை சுட்டிக்காட்டிட விரும்புகி றோம். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது நாராயணசாமி நாயுடு என்று ஒரு ஊடக விவாதத்தில் பிராமணன் கூறுவது எத்தகைய வக்ரபுத்தி கொண்ட நபர் அவர் என்பதைக் காட்டவில்லையா?


நாராயணசாமி நாயுடு விவசாயிகளுக்கான மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார் என்றாலும், விவசாயிகளுக்கான மின்சார கட்டணத்தை அறவே கட்ட வேண்டாம் என அறிவித்தவர் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் என்பதை நாடே அறிந்திருந்தும் இப்படி கூறுவதுதான் பிராமண நேர்மையா?


நமது இன்றைய கழகத் தலைவர் தளபதி அவர்கள் அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தில்கைது செய்யப்பட்டு, சித்ரவதை அனுபவித்து ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த தியாக வரலாற்றையே கொச்சைப்படுத்தும் விதத்தில், ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவே இல்லை - எனும் கட்டுக்கதை ஒன்றை கட்டவிழ்த்து விட்டு, குதூகலம் கொண்டனரே அதுதான் பிராமண நீதியா?


இந்த நேரத்தில் நாம் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்தில் உள்ளவர்களை குறிப்பிடவில்லை.


அண்ணா குறிப்பிட்ட அக்ரஹாரத்து அதிசய மனி தர்களாக, நியாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும், அநீதிக்கு எதிராக, அது எந்தக் கட்சியில் நடந்தாலும் தங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவும், இந்து ராம், ஆனந்த் சீனிவாசன், சுமந்த்.சி.ராமன் போன்ற பிராமணர்களும் இருக்கிறார்கள் என்பதினை நாம் மறுக்கவில்லை!


பிராமணர்கள், ஒன்றை மட்டும் உணர வேண்டும்! நாட்டில் பிராமண ஆதிக்கம் உச்சகட்டத்தில் இருந்து, நீதி, நிர்வாகம் போன்ற அதிகார மய்யங்கள் மட்டுமின்றி பிரச்சார சாதனங்கள் அத்தனையும் அவர்கள் கட்டுப் பாட்டில் இருந்த காலத்திலேயே அவர்களை எதிர் கொண்டது திராவிடர் இயக்கம்!


அவர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகள் அனைத் தையும் அறுத்தெரிந்து தகத்தகாயமாகப் பிரகாசித்து, தமிழர் வாழ்வில் ஒளி ஏற்றிய இயக்கத்தை தமிழர்கள் என்றும் தாங்கி நிற்பார்கள்!


இந்து மதப் போர்வையில், பிராமணரல்லாத மற்ற அனைத்து சாதியினரையும் அடிமைப்படுத்தி ஆண்ட அந்த நிலை, இனி நீங்கள் என்ன பகீரதப் பிரயத்னம் செய்தாலும் நடக்காது; நடக்க விடமாட்டான் சுயமரி யாதை உணர்வு கொண்ட திராவிடக்காளை என்பதை மட்டும் நினைவில் நிறுத்துவீர்!


நன்றி: 'முரசொலி', 27.5.2020


No comments:

Post a Comment