மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜிய ஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜிய ஒதுக்கீடு

மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது


அகில இந்திய பிற்படுத்தப்பட்ட நலச் சங்கத்தின் மனுவின்மீது மேல்நடவடிக்கை



புதுடில்லி, மே 25 அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்பில் பிற் படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு பூஜ்ஜியமாக இருப்பது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி அனுப் பிய புகாருக்குப் பதிலளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விளக்கம் கேட்டு  தாக்கீது அனுப்பியுள்ளது.


அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்


நலச் சங்க கூட்டமைப்பு புகார்


அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாகப்  புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்க கூட்டமைப்பின் (கிமிளிஙிசி) பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரகத்திலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்.


புகாரின் பேரில், தேசிய இதர பிற்படுத்தப்பட்டோர்  ஆணை யம் இப்போது மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளதுடன், இந்த விவகாரத்தில் 15 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.


இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ஏன் நிரப்பப்பட வில்லை என்று கேட்டு அரசமைப்புச் சட்டப்பிரிவு 338-பி பிரிவின் கீழ் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணையையும் தொடங்கியுள்ளது.


காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள 15 நாள்களுக்குள் மத்திய சுகாதார மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சரகம் பதில் அளிக்கத் தவறினால், நேரில் ஆஜராகி பதில் அளிக்கவேண்டும் என்று தாக்கீது அனுப்பவும் முடிவு செய்துள்ளது.


பறிபோன இட ஒதுக்கீடு


2020-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்குரிய இடங்களை மத்திய நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்தது


மாநிலங்களில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்களை மத்திய அரசு பெறுகிறது. இந்த கல்வியாண்டு 2020 - 2021 இல் 7,981 இடங்களை மாநிலங்களில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசு பெற்றுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு இடம் கூட தரப்படாமல் பூஜ்யம் என்கிற நிலைமை உள்ளது.


மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி இடங்களில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்படும் இடங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்படுகிறது.


பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு


இட ஒதுக்கீடு அடிப்படையில்


470 இடங்கள் கிடைத்திருக்கும்


தமிழ்நாட்டில் இந்த ஆண்டு, மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1,882. இதில் 50 விழுக்காடு இடங்கள் அதாவது 941 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்கிறது மத்திய அரசு. இந்த இடங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்குமானால், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் 470 இடங்கள் கிடைத்திருக்கும்.


கடந்த 2017, 2018 ஆண்டுகளிலும் அகில இந்திய தொகுப் புக்காக மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்படாததால், 2017-இல் 3,101 இடங்களும், 2018-இல் 2,429 இடங்களையும் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர். இந்த ஆண்டும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் பூஜ்ஜியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment