ஆர்.எஸ்.பாரதி இடைக்கால பிணையில் விடுதலை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

ஆர்.எஸ்.பாரதி இடைக்கால பிணையில் விடுதலை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை, மே23 திமுக அமைப் புச் செயலாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று (23.5.2020) அதிகாலை திடீ ரென கைது செய் யப்பட்டார்.  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது.


தமிழகத்தின் பல்வேறு பகு திகளில் திமுகவினர் அரசின் கைது நடவடிக்கையைக் கண் டித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். தலைவர்கள் பலரும் கடுங்கண்டனத்தைத் தெரிவித் துள்ளனர்.


திமுக அமைப்புச் செயலா ளரும், மாநிலங்களவை உறுப் பினருமான ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று அதி காலையில் கைது செய்யப்பட் டார். அதன்பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவல கத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத் தினர். விசாரணைக்குப் பிறகு அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் வீட் டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.


அப்போது, தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டார். அவரை நீதிமன் றக் காவலில் வைக்கும்படி காவல்துறைத் தரப்பில் கேட் டுக்கொள்ளப்பட்டது.


ஆனால்,  வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் இருப்ப தால் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக் குரைஞர் வாதிட்டார்.


இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் ஒன் றாம் தேதி வரை இடைக் கால பிணை வழங்கி நீதிபதி  உத்தர விட்டார். ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இடைக்கால பிணை வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.


No comments:

Post a Comment