சமூகப் புரட்சி இயக்கத்தின் போர் வீரர்கள் நாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

சமூகப் புரட்சி இயக்கத்தின் போர் வீரர்கள் நாம்

தமிழர் தலைவரின் அன்புக் கட்டளையை நிறைவேற்றி விட்டீர்களா?



முனைவர் துரை.சந்திரசேகரன்


பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்


 


தந்தை பெரியாரின் பேரியக்கத் தளகர்த்தரான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கடந்த 23.2.2019 அன்று தஞ்சையில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto)யினை வெளியிட்டார் கள். சுயமரியாதை இயக்கமாக, தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக, திராவிடர் கழகமாக தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்ட இயக்கத்தின் இலட்சிய நோக்கங்கள், அடிப்படைக் கொள்கைகள் கொண்டதாக அந்த கொள்கை விளக்க அறிக்கை அமைந்திருந்ததை நாம் அனை வரும் அறிவோம். உலக அளவில் மாந்த நலத்தைப் பேணும் முற்போக்கு அமைப்புகள் எதுவாக இருந் தாலும் அவற்றின் கொள்கைகளையும், லட்சியங்க ளையும் உள்ளடக்கியதாக நமது இயக்கக் கொள்கை என்பதே சரி.


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது திராவிடத் தத்துவம். உலகளாவிய சமநிலை மானுடம் மலர வேண்டும் என்ற குறிக்கோளாடு, 'பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்' என்பார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை, சமத்துவம், சமதர்மம் எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.


மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளா தாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமா னத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சம நிலையை உருவாக்குவதாகும்.


"ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது; மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள்; நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும், சமநிலையும் வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால் -


"நாட்டில் எல்லாத் துறைகளிலும்....


சமதர்மம்


சமஈவு


சம உடைமை


சம ஆட்சித் தன்மை


சம நோக்கு


சம நுகர்ச்சி


சம அனுபவம்


இருக்க வேண்டும்!


ஏற்பட வேண்டும்!!


ஏற்படுத்தப்பட வேண்டும்!!!


ஏற்பட்டாக வேண்டும்!!!!"


எனும் தந்தை பெரியாரின் கட்டளைச் சொற் களே கொள்கை விளக்க அறிக்கையின் அடிப் படை என்பதை உணர்த்தி தொடங்குகிறது.


அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே எனத் தொடங்கி சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என முடியும் 33 கொள்கைச் சுருக்க பிரிவுகளை திராவிடக் கொள்கைக் கோட் பாடு என அந்த அறிக்கை சுட்டுகிறது. கழகத்தின் தலைவர் தந்தை பெரியாரின் கொள்கை வீச்சை உலகு தழுவியதாக ஆக்கிடும் தமிழர் தலைவர் அவர்கள் அந்த அறிக்கையை முன்மொழிந்தார். கழகத் தோழர்கள் அனைவரும் வழிமொழிந்தோம்.


ஆசிரியரால் அறிவிக்கப்பெற்ற திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை நடைமுறைக்கு வருகிறபோதுதான் கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரியாதை சமத்துவ உலகம் மலரும்....


"யாதும் ஊரே யாவரும் கேளிர்", "உலகமே ஒரு குடும்பம்" என்னும் பரிணாம வளர்ச்சி ஏற்படும்!


பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்து மலரும்! அதற்கேற்றவாறு நமது இயக்கத்தின் நாடி நரம்புகளான கழக நிர்வாகிகளின், தோழர்களின் பயணங்களும், திட்டங்களும் அமைய வேண்டும். இதுதான் கழகத் தலைவராம் தமிழர் தலைவரின் நமக்கான அன்புக் கட்டளை.


சரியாக இந்த கொள்கை விளக்க அறிக்கை தந்து ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் பேட்ட, அரசுக்கு பொருளாதார நெருக் கடியை ஏற்படுத்திய, பல்லாயிரம் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காவு கொண்ட 'கரோனா' தொற்று அமெரிக்காவே அல்லாடும் போது நம் நாட்டை சொல்ல வேண்டுமா? நம் வாழ்வில் காணாத அளவுக்கு தனி மனித இடைவெளிக்காக வீட்டிலே முடக்கப்பட்ட அவலம். மதிப்புமிக்க மனித உழைப்பு கேள்விக்குறியானது.


நாடோ, சமூகமோ நெருக்கடியான சூழலில் இருக்கும் போது தான் ஒரு நல்ல தலைவனின் பண்பாட்டுச் செயல் - களப்பணி மிளிரும், ஒளிரும் என்பார்கள். அதற்கேற்ப தத்துவப் பேராசான் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அதே பணியாய் இருக்கும் தலைவரை நமது சமுதாயம் பெற்றிருந்த காரணத்தால்... கடினமான 'கரோனா' சூழலிலும் மக்களின் மனதை லேசானதாக ஆக்கிடவும் தன் னம்பிக்கையோடு இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் நாள்தோறும் அவரின் அறிக்கை களும், அறிவூட்டல்களும் ஆறுதலைத் தந்தது.


ஆம்! கழகத் தோழர்களையும் கடந்து தமிழ்ப் பெருமக்கள் தமிழர் தலைவரால் தேறுதல் உற்றனர் என்றே சொல்ல வேண்டும்.


இதோ தமிழர் தலைவரின் கழகத் தோழர்களின் செயல்பாட்டுக்கான வழிகாட்டுதலைப் படியுங்கள்...


கி கரோனா தொடர்பான தகவல்களை அறிந்து தேவையான வழிகாட்டுதல் பணிகளைச் செய்து வாருங்கள்...


கி பொது மக்களிடம் தொண்டு, நன்னடத்தை மூலம் தோழர்கள் பெறும் நன்மதிப்பு - இயக்கத் திற்கு பயன் விளைக்கும் இப்பொழுது நல்ல அவ காசம் கிடைத்திருக்கிறது.


கி குடும்பத்தாருடன் அதிக நேரம் செல வழிக்கும் கால கட்டம் இது. இயக்க உரையாடல்கள் இடம் பெறட்டும். பிள்ளைகளின் உளவியல் அறிந்து பகுத்தறிவுக் கருத்துகளை நயமாகக் கூறி வழிகாட்டுங்கள். குடும்பப் பிரச்சினைகள், குழந் தைகளின் எதிர்காலம், பொருளாதாரப் பிரச்சினை கள் பற்றி கலந்துப் பேசி திட்டமிடுங்கள்.


கி மற்றொன்று மிக மிக முக்கியம்: நூல்களைப் படிக்க அவகாசம் கிடைத்திருக்கிறது. இயக்க நூல்களை குறிப்பாக தந்தை பெரியார் நூல்களை கட்டாயம் படிக்க வேண்டும். சமூக வலைதளம் மூலம் கருத்துகளைப் பரப்புங்கள்.


இளைஞர்கள் வீடுகளில் முடங்கிக் கிடப்பார் கள். அவர்களிடம் சிறுசிறு நூல்களைக் கொடுத்துப் படிக்கும் வாய்ப்பை உருவாக்குங்கள்.


மருத்துவ அறிஞராக


உளவியல் அறிஞராக


குடும்பத் தலைவராக


இயக்கத் தலைவராக


பொருளாதார நிபுணராக


அறிவியல் ஆன்றோராக


எழுத்தாளராக - வாசிப்பாளராக


'நோய் நாடி நோய் முதல் நாடும்' இப்படிப்பட்ட தலைவரை நாம் பெற்றதால் எல்லாமும் பெற்றதாக அகமிக மகிழலாம். எத்தனை சமுதாயப் பொறுப் புணர்ச்சி வார்த்தைகள் அவரின் வழிகாட்டுதல் எழுத்தில்!


விழிப்போடு இருந்து உடல் நலனைப் பேணச் சொல்கிறார். ஒவ்வொரு நொடியையும் பயனுள்ள தாகச் சொல்கிறார்.


எந்த ஒரு சூழ்நிலையையும் பயனுள்ளதாக மாற்றி அமைப்பது தான் பகுத்தறிவு எனச் சுட்டுகிறார். மாபெரும் சமூகப் புரட்சி இயக்கத்தின் போர் வீரர்கள் நாம் என்பதைத் தூண்டுகிறார்!


சொத்தைகளோ - சோடைகளோ அல்லர் நாம். பெரியார் பெரும் படையின் வீரர்கள். ஓய்வும், சோர்வும் தற்கொலைக்குச் சமமானது என்ற பெரியார் இயக்கத்தின் தூய தொண்டர்கள். எடுத்ததை முடிக்கும் செயல்வீரர்கள்.


24.3.2020 முதல் ஊடரங்கு அறிவிப்பு அரசு செய்கிறது. நாடே மயான அமைதியில்! அலுவல கங்கள் எதுவும் இயங்கக் கூடாது என்ற நிலையில் தன் வீட்டு அறையையே அலுவலகமாக மாற்றினார் தமிழர் தலைவர். ஆம்! தலைமைக் கழகமும் அதுவே; விடுதலை அலுவலகமும் அதுவே! கழக நிர்வாகிகளுடனும் முன்னணித் தோழர்களுடனும் நம்பிக்கையுட்டும் வார்த்தைகளால் நல்ல நம்பிக்கையை - தன்னம்பிக்கையை செல்பேசி வழியே அன்றாடம் பேசுமிடமும் அதுவே. 'கரோனா' அச்சம் அவரை என்ன செய்யும்?


காணொலி காட்சி வழியே சந்திக்கத் தொடங் கினார் கழக நிர்வாகிகளுடன். நிர்வாகிகளுக்கும், கழகத் தோழர்களுக்கும் தலைவரின் முகத்தைப் பார்த்ததும், அவரின் கருத்தைக் கேட்டதும் அன்ற லர்ந்த செந்தாமரை ஆனது! அறிவுலக ஆசான் அய்யா பெரியாரிடம் பயிற்சி பெற்றவர் அலலவா? சும்மா இருப்பதே சுகம் என்று அவரால் எப்படி இருக்க முடியும்? தோழர்களை ஊக்கப்படுத்து கிறார்... உற்சாகமூட்டுகிறார்... ஆசிரியர் தொடக்கி வைத்த காணொலி கலந்துறவாடலை தோழமைக் கட்சி தலைவர்களும் தொடர்கின்றனர்.


30.3.2020 அன்று விடுதலை அறிக்கை. சமூகப் புரட்சிக்கான போர் வீரர்களே... உடலுக்குத்தான் முடக்கம் - சிந்தனைக்கு அல்ல... இன்றே... இப் போதிருந்தே வீட்டிலிருந்தபடியே தனி மனித இடைவெளியை தொடர்ந்தபடியே உங்களால் செயல் பட முடியும்...! செயல்படுத்திடவும் முடியும்!


21 செயல்திட்டங்களை வகுத்தளிக்கிறார். 7 பதிவேடுகள் 2 கோப்புகள் பராமரித்தல், கழகத் தையும், துணை அமைப்புகளையும் அமைப்பு ரீதியில் வலிமைப்படுத்துதல், மாணவர்கள் - இளைஞர்கள் எனும் புதிய வரவுகளை ஈர்த்தல், சேர்த்தல், உறுப்பினர் சேர்க்கை, பிரச்சார முறை களில் புதுமை, கொள்கைப் பயிற்சி வகுப்புகள், எளிய முறையில் நிகழ்வுகளை முன்னெடுத்தல்.


இப்படியாய் செயல்பாட்டைத் தொடங்கிட, தொடர்ந்திட முயலுங்கள்... அதுபற்றி மேலும் சிறப்புடையதாய் ஆக்கிட சிந்தியுங்கள்... நல்ல சமயம் இது - நழுவ விடலாமோ என தலைவரின் அறிக்கை.


எல்லாவற்றுக்கும் மேலாக 'விடுதலை' ஏடு பரவல்... எதிர்பாரா வண்ணம் 'வாட்ஸ்அப்' மூலம் ஒன்றரை லட்சத்தையும் கடந்து வாசகர்களை சென்றடைந்திருக்கிறது என்ற செய்தி ஒவ்வொரு தோழரையும் உற்சாகப்படுத்தி உள்ள செய்தியாகும் - இன்னமும் கூடுதலாக வாசகர்களை சென்றடைய வேண்டும் - அறிவுக்கும், மான உணர்வுக்கும் மக்களை ஆயத்தப்படுத்தும் 'விடுதலை' என்பது நம் தலைவரின் அன்புக் கட்டளை!


கழக அமைப்பின் வளர்ச்சிக்கும், மண்டல - மாவட்ட - ஒன்றிய - நகர - கிளைக் கழக செயல் பாட்டுத் திறனுக்கும் வலிவு சேர்ப்பது பதிவேடுகள் பராமரித்தல். நிகழ்வுகள், செயல்பாடுகளின் வர லாற்றைத் தொகுத்து வைத்திருப்பதே 'கோப்புகள்' என்பதை உணருங்கள். உங்கள் தளத்தின் தன்மை உங்களுக்குத்தான் தெரியும்... அதற்கேற்ப பிரச்சார முறைகளில் என்னென்ன உத்திகளை செயல்படுத்தினால் புதிய வரவுகளை கழகத்தின் பக்கம் ஈர்க்கலாம் என்ற அளவில் சிந்தியுங்கள் - கரோனா முடிந்து செயலாற்றுவோம்! மாவட்ட வாரியாக கொளகைப் பயிற்சி வகுப்புகள், பெரியார் 1000 போட்டிகள், மாணவர் விடுதிகளில் மாணவர் கள் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு சந்திப்புகள், மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம் வலிமையாக் கப்படல்... இதுபற்றி யெல்லாம் ஆழமாக சிந்தி யுங்கள்.


ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்தும் மதவெறிப் போக்கிலிருந்தும் மக்களை காக்க வேண்டிய கட மையும் பொறுப்பும் நமக்கே உண்டு. அய்யாவின் அடிச்சுவட்டில் களமாடி வெற்றி இலக்கை சென்ற டைய தமிழர் தலைவரின் ஆசையை - அன்புக் கட்டளையை நிறைவேற்றிட முயலுவோமா. வெற்றி நமதே!


No comments:

Post a Comment