தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் அரசும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றுபட்டு எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தகுந்த முடிவாகும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 9, 2020

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் அரசும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றுபட்டு எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தகுந்த முடிவாகும்!

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் என்பதில் மாத வருமானம், விவசாய வருமானம் இவற்றைப் புகுத்துவது இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கே விரோதமானது!


இதனை உறுதிப்படுத்தி தமிழ்நாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்ப்போம்!



இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல் என்பது அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. இந்த நிலையில், கிரி மிலேயர் என்ற போர்வையில் பொருளா தார அளவுகோலைக் கொண்டு வரு வதும், தொடர்ந்து மாத வருமானம், விவசாய வருமானமும் அதில் சேரும் என்பதும் இதற்குமுன் இல்லாதவற்றைக் கொண்டு வந்து திணிப்பதும் பார்ப்பன அதிகாரிகளின், ஆர்.எஸ்.எஸ்.காரர் களின் திட்டமிட்ட வேலையாகும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சி யும், எதிர்க்கட்சித் தலைவரும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். இதனை வரவேற்று அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டு, பாதுகாக்கப்படும் முக்கிய கோட்பாடு - காலங்காலமாய் கல்வியிலும், உத்தியோ கங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புது வாய்ப்பு, புது வாழ்வு தருவதற்காக நமது தலைவர்கள் போராடி, பெற்ற உரிமை களாகும்.


இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்ய, உயர்ஜாதி ஆதிக் கம் கொண்ட அதிகாரவர்க்கமும், நீதிமன் றங்களும் நாளும் முயற்சித்த வண்ணம் உள்ளன.


மக்கள் மன்றத்தின் திரண்ட முயற்சியும், தொடர்ந்த விழிப்புணர்வும்தான் இதைக் காப்பாற்றும் வகையில் போராடி வெற்றி கண்டு வருகிறது.


ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்தும் பா.ஜ.க. அரசு


தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்கு சட்டப்படி கிடைக்கும் இட ஒதுக்கீட்டினைத் தட்டிப் பறிக்க பல ‘கண்ணிவெடிகள்' அவ் வப்போது வைக்க அதிகார ஆதிக்க சக்தி களும், பொருளாதார அடிப்படை என்று கொண்டு வந்துவிட்டால், இட ஒதுக்கீட்டின் மூலக்கூறுபாட்டினையே அழித்துவிட முடியும் என்றே திட்டமிட்டு, புதிய முயற்சி களை ஆளும் கட்சியான ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்தும் பா.ஜ.க. அரசு முனைப்புக் காட்டி வருகிறது.


எடுத்துக்காட்டாக, 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பதில் தேவையற்ற பொரு ளாதார அளவுகோலைப் புகுத்தி, கைக்கெட் டியதை வாய்க்கெட்டாமல் செய்து வரும் வகையில், இதனைப் பாதுகாக்கவேண்டிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் கூட ‘வேலியே பயிரை மேய்வதற்குத்' துணை நிற்பதுபோல், பொருளாதார அளவு கோல் - புதுப்புது உத்திகளாக - சம்பளம் - விவசாய வருமானம் உள்ளிட்ட  12 லட்சம் என்றெல்லாம் உயர்த்தி இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவத்தையே அழிக்க முயலுகின்றனர்!


‘‘Reservation is not a poverty alleviation scheme'' - ‘‘இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல'' - என்று உச்சநீதிமன்ற நீதிபதி களேகூட வசந்தகுமார் வழக்கில் தெளிவு படுத்தியும்கூட, இத்தகைய கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்ந்த வண்ணம் உள்ளது!


பெரியார் மண்தான் இந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம்!


பெரியார் மண்ணான - சமூகநீதி பூமிய £ம் தமிழ்நாடுதான் இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாகும். தமிழ்நாடுதான் சரியான வழிகாட்டும் மாநிலம்.



  1. இப்போது மத்திய அரசின் முயற்சியான பிற்படுத்தப்பட்டோருக்குக் கிரிமிலேயரில் புதிய சேர்க்கைகள் - சம்பளத்தைச் சேர்ப் பது போன்றவை - முன் கூறப்பட்ட உறுதி மொழிகளுக்கு எதிரானது என்பதையும்,

  2. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல்.

  3. மருத்துவப் படிப்புகளில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்க £ன சேர்க்கைகளில் - ‘நீட்' எனும் மத்திய அரசால் புகுத்தப்பட்ட நுழைவு (அது அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முர ணானது - தேர்வு நடத்தும் உரிமை பல் கலைக் கழகங்களுக்கு மட்டுமே உரியது) தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு நீண்ட விளக்கமாக கடிதம் எழுதியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது!


மாத வருமானமும் - விவசாய வரு மானமும் கிரிமிலேயர் கணக்கில் கொண்டு வரப்படுவதையும் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்துள்ளது சிறப்பானதாகும்!


வரவேற்கத்தக்கது!


அதுபோலவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு, ஓ.பி.சி. - பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில், தற்போதுள்ள நிலையே தொடரவேண்டும் - இதில் சம்பளம், விவசாய வருமானத்தை இணைக் கக் கூடாது என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.


கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, சமூகநீதியில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் (பார்ப்பனர்களைத் தவிர) ஒரே நிலைப்பாட்டில் உள்ளது மிகவும் குறிப் பிடத்தக்க ஒன்றாகும்!


தமிழ்நாடு - ‘நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை இப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்; கொள்கை அளவில் தொடக்கத்திலிருந்தே அந்த நிலைப்பாடு உடையதாக இருந் தாலும், இடையில் அதில் காட்டப்பட்ட தொய்வு இப்போது தவிர்க்கப்படுதல் அவசர அவசியம்!


சமூகநீதி - இட ஒதுக்கீட்டினைப் பாதுகாக்க தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி என்ற பேதம் துளியும் இன்றி அனைவரும் ஒரே குரலில், ஓரணியில் - மத்தியத் தொகுப்புக்கு அளித்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு இட ஒதுக்கீடு பெறு வதில் வழக்குகள் போடுவதற்கு ஒரே நிலைப்பாட்டுடன் இருப்பது பாராட்டத் தக்கது!


ஒருங்கிணைந்து


போராடவும் தயங்கக் கூடாது!


இந்த உறுதியை மேலும் வலுப்படுத்திட வேண்டும்; இதில் எந்தக் கட்சிக்கு வெற்றி என்ற பிரச்சினையே இல்லை; மாறாக, சமூகநீதிக்கு வெற்றி - தமிழ்நாட்டு மக் களுக்கு வெற்றி என்ற அளவில் ஒருங்கிணைந்து போராடவும் தயங்கக் கூடாது.


உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதற்கு இடையறாத விழிப்புணர்வும், தொடர் அறப்போராட்டங்களும் தேவை! தேவை!!


ஆயத்தமாவோம்! மக்களை ஆயத்தப் படுத்துவோம்!!


இது உறுதி! உறுதி!!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


9.7.2020


No comments:

Post a Comment