கரோனா தொற்று தடுப்புக் குழுக்களில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறல் வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

கரோனா தொற்று தடுப்புக் குழுக்களில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறல் வேண்டும்

தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை, மே 22- கரோனா தொற்று தடுப்புக் குழுக்களில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறல் வேண்டும் என திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


அறிக்கை விவரம் வருமாறு:


கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களி லும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு- அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல் லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக் கிறது.


ஒவ்வொரு பகுதியிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவ னம் செலுத்த வேண்டும் என்பதற் காக - ஏற்கெனவே அந்தந்தப் பகுதி களில் உள்ள அதிகாரிகளுக்கு மேல், “சிறப்பு அதிகாரிகளை” நிய மித்திருப்பதால் மட்டுமே,  கரோனா நோய் கட்டுக்குள் வந்து விட்டதாகத் தெரியவில்லை. இது அதிகாரிகளுக்குள்ளே அதிகாரப் போட்டி, பொறாமை ஆகிய வற்றை ஏற்படுத்தவே பயன்படும்.


தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண் டிருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மக் களின் அச்சம்  பெருகிக் கொண்டே இருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்,- மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக் கிறது. இந்தப் பணியில் அதிகாரி களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை யும் பயன் படுத்தினால் தான் சிறப்பாக இருக் கும். ஏனென்றால், மக் கள் தங்கள் குறைகளை அவர்களிடம்தான் நெருங்கி, தயங்காமல் கூறுவதற் கான வாய்ப்பு உருவாகும்; உட னடி கோரிக்கைகளை நிறைவேற் றிடவும் முடியும்.


எனவே, இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திட வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில், மாநில அளவிலி ருந்து, நகராட்சி,- ஊராட்சி வார் டுகள் வரை, அனைத்துக் கட்சிக ளும் அரவணைக்கப்பட்டு, ஒருங் கிணைப்புக் குழுக்கள் அமைக் கப்பட்டு, வெகு சிறப்பாகப் பணி கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதைப் பார்த்தாவது, மக்களாட்சி யின் நெறிமுறைகளை உணர்ந்து, தமிழக முதல்வர் தன்னைத் திரு த்திக் கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது!


தனது அமைச்ச ரவை சகாக்க ளையும் கூட நம்பாமல், ஏதோ ஒரு விசித்திரமான மனப்பான்மை யின் காரணமாக ஒதுக்கிவைத்து, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொள்ளவும், முக்கியத்து வம் தேடிக் கொள்ளவும், முதல்வர் முயற்சி செய் வது, அதுவும் இந்த கரோனா நெருக்கடி காலத்தில் செய்வது, பேரிடர் மேலாண் மைக்கு ஆக்கப்பூர்வமான அடை யாளம் அல்ல!


எனவே ஜனநாயக ரீதியாக,  கடமைகளையும் பொறுப்புகளை யும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து, கரோனா பேரிடரை எதிர்கொள் வதே ஏற்கத் தகுந்ததாகும்!


இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது-.


No comments:

Post a Comment