அண்ணாமலை பல்கலைக் கழக பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

அண்ணாமலை பல்கலைக் கழக பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!

இரா.முத்தரசன் வலியுறுத்தல்



சென்னை,மே22, அண்ணாமலை பல் கலைக் கழக பிரச் சினையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: புகழார்ந்த பாரம்பரியம் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தனியார் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் நடந்த  நிர்வாகச் சீர்கேடு களால் நெருக்கடி ஏற்பட்டு, அப்பல் கலைக் கழகத்தை  தமிழ்நாடு அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு எடுத்துக் கொண்டது.


பல்கலைக் கழக நெருக்கடிகள் குறித்து பணியாளர்கள் சங்கங்களுடன் நிர்வாக அதிகாரி திரு சிவதாஸ் மீனா நடத்திய பேச்சுவார்த்தையில் சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்கள் 3 ஆயிரத்து 600 பணியாளர்கள் அரசின் பல்வேறு துறைகளில் அயல் பணியிடத்தில் 3 ஆண்டு காலம் பணி நிரவல் முறையில் பணியாற்றுவது, பின்னர்  பழையபடி பணியுயர்வு உள் ளிட்ட உரிமைகளுடன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மீண்டும் பணியமர்த் துவது என்று ஒப்பந்தம் காணப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த காலம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது விட்டது.


இதன்படி அண்ணாமலைப் பல் கலைக் கழகம் 2040 சி மற்றும் டி பணியாளர்களுக்கு உடனடியாக பணி அமர்வு வழங்க வேண்டும். ஆனால், இதனை செய்ய மறுத்து வரும் பல் கலைக் கழக நிர்வாகம் ஒப்பந்த காலத்தை மேலும் நீடித்து பணி யாளர்களை வஞ்சிக்கும் போக்கில்  செயல்பட்டு வருகிறது. பல்கலைக் கழகத்தின் நியாயமற்ற பணியாளர் நடைமுறைகளை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது.


இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் தமிழ் நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, பணி நிரவலில் அயல் பணிகளுக்கு சென்ற அண்ணா மலை பல்கலைக் கழக சி மற்றும் டி பிரிவு பணியாளர்களை மீண்டும் பல் கலைக் கழகத்தில் பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.       இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 


 


No comments:

Post a Comment