பிரபல பத்திரிகையாளர் ஜார்ஜ் ‘இண்டியன் எக்ஸ்பிரசில்' ஏட்டில் எழுதிய கட்டுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 25, 2020

பிரபல பத்திரிகையாளர் ஜார்ஜ் ‘இண்டியன் எக்ஸ்பிரசில்' ஏட்டில் எழுதிய கட்டுரை

கல்லறை உலகத்தைக் காண நாம் தயாராவதா?


ஒரு நகைச்சுவை கதையின் பெயர் 2025


மனிதரின் நகைச்சுவை உணர்ச்சியை நோய்க் கிருமிகளால் தோற்கடித்துவிட முடியாது. இணைய தளத்தில் இன்று வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நகைச்சுவை கதையின் பெயர் 2025 ஆம் ஆண்டின் வகுப்பு என்பதாகும். எப்போதுமே மகிழ்ச்சியாகவும், ஆனால் கண்டிப்பு நிறைந்த பள்ளி ஆசிரியர்  ஒருவர், மாணவர்களின் வருகைப் பதிவேட்டின்படி அவர்கள் வந்துள்ளனரா என்று சரி பார்ப்பதற்காக அழைக்கிறார். குவாரண்டினா ஜோஷி,  லாக்டவுன் சிங் லத்தோர், கோவிட் அவாஸ்தி, கரோனா பால் சிங்,  சோஷியல் டிஸ்டன் சிங்,  மாஸ்க் மஹ்தோ, க்ளவுஸ் கெயிக்வார்ட்,  வூஹன் படோரியா என்று மாணவர்களின் பெயர்களை அழைத்தபோது, வூஹன் படோரியா பதில் சொல்லவில்லை. வூஹன், நீயும் கோவிட்டும் பெரும் குறும் புக்காரர்கள். என் வகுப்பை விட்டு வெளியே போய்விடு  என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். தனக்கு மிகவும் பிரியமான மாணவன் ஆத்மநிர்பார் கேலேவாலா தான் என்று தாய்மைப் பாசத்துடன் ஆசிரியை ஒப்புக்கொள்கிறார்.


மன்னிக்க இயலாத சமூக விரோதச் செயலாகப் பார்க்கக் கூடும்!


மனிதர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்ளும் பேரழிவுச் செயல்களிலிருந்து தப்பி உயிர் பிழைத்திருப்பதற்கு இந்த நகைச் சுவை உணர்வுதான் நமக்கு உதவுகிறது. என்றாலும் அது உண்மை நிலையை அழித்துவிடுவதில்லை. இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மை நிலை என்னவென்றால்,  கரோனா நோய்க் கிருமி இந்த உலகத்தையும், வாழ்க்கையைப் பற்றிய நமது கோட்பாட் டையும் மாற்றி அமைக்கவே போகிறது. முகக்கவசம் அணிவது, கூட்டமாக இருப்பதைத் தவிர்ப்பது போன்ற ஏற்கெனவே நமது வாழ்க்கை நடைமுறையில் உள்ளவை எந்த வகையிலும், ஒரு தற்காலிக பிரச்சினையைக் கையாள்வதற்காக தற்காலிகமாக ஒத்திசைந்து செல்வது என்பது ஆகாது. இந்தக் கணம் முதல் அதுதான் நமது வாழ்க்கை. தும்முபவர்கள், இருமுபவர்கள் ஆகியவர்கள் மீது பரிதாபம் கொள்க. மிகுந்த எச்சரிக்கையுடன் அவற்றை அவர்கள் செய்திருக்கக்கூடும். ஆனால் மற்றவர்களோ அதனை மன்னிக்க இயலாத சமூக விரோதச் செயலாகப் பார்க்கக் கூடும்.


சில விஷயங்கள் எப்போதுமே மாற்றம் அடைவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அரசுகள் இதனை எப்போதுமே ஒப்புக் கொள்வதில்லை. எடுத்துக் காட்டாக அரசுகளும் தவறுகளைச் செய்யக் கூடியவைதான். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தாங்கள்தான் மிகச் சிறந்த முறையில் அறிந்து உள்ளோம் என்றும், தங்களது செயல்பாடுகள் மட்டுமே விவேகம் நிறைந்தவை என்றும் அனைத்து அரசுகளும்  நம்புகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று வரை, அந்த நடவடிக்கை சரியானதுதான் என்றே மோடியின் ஆதரவாளர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். இப்போது  கரோனா ஊரடங்கு சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு மணி நேர கால அவகாசம் மட்டுமே அளித்து ஊரடங்கு சட்டத்தை அறிவித்து நடைமுறைப் படுத்தியதில் தவறேதுமில்லை என்றே மோடியின் ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.


மிகச் சரியான நடவடிக்கைகள் தவறுகளே இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற இந்த உணர்வுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமே இட முயன்ற அதிகார முத்திரையை  அவர் பொறித்துள்ளார். தான் விரும்பும் தனது சொந்த வழியிலேயே செல்வதற்கு விரும் புபவர் அவர். பாராம்பரியமாக வரவு-செலவு நிதி நிலை அறிக்கையைக் கொண்டு வரும் கைப்பெட்டியில்  வைத்து இந்த ஆண்டு அறிக்கையை நிர்மலா கொண்டுவராமல், ஒரு துணியில் மூட்டைகட்டிக் கொண்டு வந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். பொருளாதார மேம்பாட்டுக்கு ஊக்கம் அளிப்பதற்காக அவர் அறிமுகப்படுத்திய 20 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒரு புதிய செயல்திட்டத்தின் அய்ந்து அம்ச விவரங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு அவர் அய்ந்து நாட்களை எடுத்துக் கொண்டார். இந்த அளவுக்கு  மிகமிக நீண்ட முறையில் தனது விளக்கத்தை இழுத்துக் கொண்டே சென்றால், அமைச்சர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை பொதுமக்களால் சரியாகப் புரிந்து கொண்டு பின்பற்றப்பட முடியாமல் போய் விடக்கூடும் என்றும், அதனால் தான் கூறுவதற்கு நேர் எதிரானவற்றை செய்யும்போது சிக்கிக் கொள்ளாமல் தான் தப்பித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நினைத்திருக்கக்கூடும்.


புதிய 20 லட்சம் கோடி செயல்திட்டம்  எட்ட முடியாத கானல் நீராகவே போய்விட்டது


ஆத்மநிர்பர்தா  என்ற சுயசார்பு கோட்பாடே மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் இதயமாக விளங்குகிறது என்று அவர் கூறுகிறார். ஆனால், அவர் செய்வது என்னவென்றால்,  அயல்நாட்டு தனியார் நிறு வனங்களிடம் அனைத்து திட்டங்களையும் ஒப்படைப்பதன் மூலம் சுயசார்பு இன்றி மற்றவர்களை சார்ந்தே இருப்பதுதான் தங்களது கொள்கை என்று அவர் மெய்ப்பித்துள்ளார். இந்திய பாதுகாப்புத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னர் 49 சதவிகிதமாக இருந்த பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் பணிகளில் இப்போது 74 சதவிகித அளவு பணிகள் அயல்நாட்டு நிறுவனங்களுடையதாக இருக்கும். அவரது புதிய 20 லட்சம் கோடி செயல்திட்டம்  எட்ட முடியாத கானல் நீராகவே போய்விட்டது. அதன் பின் உள்ள கோட்பாட்டை ஒரு சிலர் வரவேற்ற போதிலும், இந்த செயல்திட்டத்தின் பயன்பாடுகளில் தாங்கள் சேர்க்கப்பட வில்லை என்றே பலரும் கருதுகின்றனர். இதுதான் நிர்மலா சீதாராமின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் புதிய எல்லைகள், புதிய முதலீடுகளை செய்வது, உற்பத்தியைப் பெருக்கி கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகும்.


வல்லுநர்களின் கருத்து!


அரசினால் மேற்கொள்ளப்பட்ட எந்த விதமான நட வடிக்கைகளாலும் கரோனா-19 நோய்த் தொற்றுக் கிருமிகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதில் வியப்பேதும் இல்லை. உண்மையைக் கூறுவதானால், ஊரடங்கு காலத்தில் இந்த நோய்க்கிருமிகள் பரவவே செய்தன. இதன் காரணம், முடிவு எடுக்கும் நிலையில் இருந்த ஆட்சியாளர்கள் தொழில் நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைகளை அலட்சியப் படுத்தி புறக்கணிக்கச்  செய்ததுதான். நோய்த் தொற்று சோதனையின் அளவு உயர்த்தப்பட வேண்டும் என்றும்,  மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும், வழிகாட்டும் நெறிமுறைகள்  வரையறுக்கப்பட வேண்டும் மற்றும் புரோட்டோகால் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் ஆலோசனை கூறினார்.  ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, இந்தப் பிரச்சினைக்கு மிகமிக முக்கியமான ஒரு தீர்வல்ல என்றே வல்லுநர்கள் கருதினர். என்ற போதிலும்  ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மீதே  அரசு முழுமையான கவனம் செலுத்தி, வலியுறுத்தி வந்தது. ஒரு வேளை நாடகத்தனமான அதன் பாதிப்புக்காக அரசு அவ்வாறு செய்தது போலும்.


ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளியது இந்தியா


ஊரடங்கு சட்டமும் அறிவியல் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே கோவிட்-19 எதிர்ப்புப் படை கூறுகிறது. ஊரடங்கு சட்டம் மூன்றாவது தவணையில் நீட்டிக்கப்பட்ட போது, விரும்பி எதிர்பார்த்த பயன்கள் ஊரடங்கு சட்டத்தினால் கிடைக்கவில்லை என்பதால், இந்த ஊரடங்கு சட்ட முயற்சி தோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாகவே தெரிந்தது. டாஸ்க் போர்சின் ஆலோசனைகளை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே இதன் காரணம். இதன் ஒட்டு மொத்த விளைவு என்னவென்றால்,  130 கோடி மக்கள் ஊரடங்கு சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த போதிலும்,  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று பற்றிக் கொண்டது என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கோவிட் புயல் மய்யம் கொண்டிருக்கும் நாடாக, சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா ஆகிவிட்டது.


மோடி அரசில் ஏற்கெனவே ஒரே தலைவரின்கீழ் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டுள்ளன


இந்த ஊரடங்கு சட்டம் காரணமாக  மக்கள் அரசியலில் ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று. ஊரடங்கு சட்டம் என்பது எந்த ஒரு நாட்டிலும், ஒரே கட்சி - ஒரே தலைவராக விளங்க வேண்டும் என்ற பேராசை ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாகும். பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், சுயநலம் பிடித்த தனிப்பட்டவர்களின் நலன்களை மேம்படுத்தச் செய்வது என்பது எளிதானதாக இருப்பதாகும். மோடி அரசில் ஏற்கெனவே ஒரே தலைவரின் கீழ் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டுள்ளன. இப்போது மேலும் மேலும் சர்வாதிகாரமாக செயல்படுவதற்கான வாய்ப்பு மோடியின் பா.ஜ.க. அரசுக்கு கிடைத்துள்ளது. நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பதையும் மாற்றுக் குரல்களுக்கு இடமளிப்பதற்கான முறையான வழிமுறைகள் ஏதும் இல்லை என்பதையும்   நினைவில் கொள்ளுங்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களை அதிகாரத்தில் உறுதியாக நிலை  நிறுத்திக் கொண்டனர்.


புதிய மாதிரியிலான தலைமையும், ஒரு புதிய வகையான கண்ணோட்டமும் தேவைப்படுகிறது


ஓர் அரசின் தலைமை நிர்வாகியை ‘கடவுளின் தூதர்' என்று எடுத்துக் காட்டுவது பயன் நிறைந்ததாக இருப்பதுதான்.  ஏற்கெனவே  திடீரென்று எதிர்பாராத முறையில், முன்எப் போதுமில்லாத வழியில் ஏற்படும்  எதிர்கொள்ளும் அச்சுறுத் தல்களைக் கையாள்வதற்கு அது நமக்கு எந்த வகையில் உதவப் போவதில்லை. சமூக, வியாபார உண்மைகள்  அனைத்து நேரங்களிலும் மாற்றம் அடைந்ததால், நாட்டின் பொருளாதார நிலை சீரழிந்துள்ளது. எடுத்துக் காட்டாக சுற்றுலாத் துறை என்பது அழிந்து போன ஒரு துறையாகவே ஆகிவிட்டது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவில் உள்ள விடுதிகளில் 70 சதவிகித அளவிலான விடுதிகள் மூடப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. கல்லறை போன்ற ஒரு புதிய உலகமிது. இதற்கு ஒரு புதிய மாதிரியி லான தலைமையும், ஒரு புதிய வகையான கண்ணோட்டமும் தேவைப்படுகிறது. என்னதான் அவை?


 நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ், 24-05-2020


                தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment