ஊசிமிளகாய்
காவிக் கட்சியினர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பிரதமர் மோடி முன்பெல்லாம் ‘ஜெய் சிறீராம்‘ என்றுதான் எதிர் முழக்கம் செய்வர்!
ஹிந்துத்துவ வெறிபிடித்த காவிக் காலிகள் பலர் கார்களை நிறுத்தி, டில்லியிலும், உ.பி.யிலும் மற்ற சில ஊர்களிலும், வடபுலத்தில் கட்டாயமாக பயணிகளை மிரட்டி ‘ஜெய் சிறீராம்‘ என்று கூச்சல் போட வற்புறுத்தி, அச்சுறுத்துவர்!
உ.பி.யில் ஒருவரை ஒருவர் சந்தித்து வணக்கம் தெரிவிப்பதற்குப் பதிலாக – முட்டிக்காலைத் தொட்டு, ‘‘ராம் ராம்‘‘ என்பர்; அவர்களும் திருப்பி வணக்கமோ, நமஸ்காரமோ சொல்லாமல், திருப்பி ‘‘ராம் ராம்‘‘ மட்டுமே சொல்லும் அளவுக்கு மக்களுக்கு ‘மூளைச்சாயம்‘ ஏற்பட்டது!
அதைத் தேர்தல் மூலதனமாக்கி வெற்றி பெற அயோத்தியில் அவசர அவசரமாகப் பயன்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அரசான மோடி அரசு. உச்சநீதிமன்றமும் இதற்குத் தனது தினசரி விசாரணை என்று நடத்தி, தீர்ப்பை நியாய விரோதமாக, நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, சான்றா வணங்களை எடுத்துக்கொள்ளாமல், தீர்ப்பு வழங்கியது. எப்படியோ அவசரக் கோலம் அள்ளித் தெளித்ததுபோல 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்குள் பால இராமன் கோவிலை அயோத்தியில் கட்டி, இந்தியா முழுவதும் யாத்திரை, கூசும் அளவுக்கு விளம்பர வெளிச்சத்தில் நீந்தி கடையேறித் தேர்தல் பிரச்சாரத்தை செய்தனர்!
விளைவு, படுதோல்வி! அயோத்தியில் மட்டுமல்ல, அதன் சுற்றுத் தொகுதியில் மட்டுமல்ல; மோடி போன இராமேசுவரம், இராமநாதபுரம், சீறிசைலம், எல்லாத் தொகுதிகளிலும் தோல்விக்குமேல் தோல்வி!
இந்தப் புரட்டுக்குப் பொட்டு வைப்பதுபோல், இராமன் கோவில் கூரை ஒழுகல், கர்ப்பக்கிரகத்தில் பூசை செய்ய முடியாமல், அர்ச்சர்களே புகார், அரை குறையாக, அவசரக் கதியின் அவலத்தின் கொடு மையை பால இராமன் அன்றாடம் அனுபவிக்கிறார்!
அயோத்தி விமான நிலையமோ வெறிச்சோடி, ஈ ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டது!
இதனால், பால இராமன் – முற்றிய ராமன் எல்லாம் மோடியால் கைவிடப்பட்டு, ஒடிசாவில் கிடைத்த ஆறுதல் பரிசை எண்ணி, பூரி ஜெகன்னாதரை அடைக்கலம் தேடி, ‘ஜெய் ஜெகன்னாத்‘துக்கு மாறினர் மோடியும், அவரது சுற்றுக்கிரகங்களும்!
ஆனாலும், அங்கேயும் பூரி ஜெகன்னாதர் கடவுள் அன்ட் கோ கைகொடுக்கவில்லை போலும்!
இதோ இன்று வந்துள்ள ஒரு செய்தி – பூரி ஜெகன்னாதன்பற்றி, படியுங்கள்!
பூரி ஜெகநாதர் கோவிலில் ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்த சம்பவத்தில்
9 பக்தர்கள் காயமடைந்தனர்
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இந்து மத வழிபாட்டு தலமான உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 7ம் தேதி ரத யாத்திரை நடைபெற்றது. இதில் பலராமர், கிருஷ்ணர், சுபத்ரா ஆகிய கடவுள் சிலைகள் தனித்தனி தேரில் நகர் முழுவதும் யாத்திரையாக கொண்டுவரப்பட்டன. இதை தொடர்ந்து பிற கடவுள் சிலைகளும் யாத்திரையாக நகர் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பூரி ஜெகநாதர் கோவில் உள்ள கடவுள் பாலபத்ராவின் சிலை நேற்று (9.7.2024) யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ரத யாத்திரை சென்று கொண்டி ருந்தபோது எதிர்பாராத விதமாக கடவுள் பாலபத்ராவின் சிலை சரிந்து பக்தர்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: கடவுள் சிலைகள் என்று ஊடகங்களில் வந்துள்ள செய்தி கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment