புதுச்சேரி மாநிலத்தில் சிபிஎஸ்சி கல்வித் திட்டமாம் பள்ளி நேரமும் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

புதுச்சேரி மாநிலத்தில் சிபிஎஸ்சி கல்வித் திட்டமாம் பள்ளி நேரமும் அதிகரிப்பு

featured image

புதுச்சேரி, ஜூலை 11- புதுச்சேரி அரசு பழைய கல்வித் திட்டத்தை மாற்றி அனைவருக்கும் சிபிஎஸ்சி யை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதில் பாடத் திட்டங்கள் அதிக மாக இருக்கும் பட்சத்தில் தற்பொழுது பாடவேளை நேரத்தையும் அதிகரித் துள்ளது. மேற்கொண்டு இது குறித்த அறிக்கையை புதுச்சேரி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பழைய பாடத்திட்டத்தை ரத்து செய்து விட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் கூடுதலாக படிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனை சரிகட்டும் விதமாக ஏழு பாட வேலைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இதனை சரிகட்டும் விதமாக இதனை எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கொண்டு மாணவர்களின் பள்ளி நேரமும் மாற்றியமைக்கப்பட் டுள்ளது.
காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கும் பள்ளியானது தற் பொழுது 9 மணிக்கு ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளனர். மாலை 4:20 மணி வரை பள்ளி செயல்படும் என்று கூறியுள்ளனர். ஒரு நாளில் எட்டு பாட வேலைகள் அமையும்படி வகுப்புகள் பிரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல மதியம் 12.25 மணியி லிருந்து 1.00 மணி வரை உணவு இடைவெளி என்றும் கூறியுள்ளனர். புதிய பாடத் திட்டம் படிக்க மாணவர் களுக்கு ஏதுவாக அமைய இவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment