கல்யாணகுமார்-இரமணி ஆகியோரின் மகள் க.ரஷ்யாவிற்கும், சந்தனராஜ்-விஜயா ஆகியோரின் மகன் ரஞ்சித் சின்னையாமூருக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். (திமுக), கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங், கபடி இராமகிருஷ்ணன், நெல்லுப்பட்டு இராமலிங்கம் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர். (6.7.2024)
மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களின் இல்ல மண விழாவில் ஒக்கநாடு மேலையூர், பாலா கன்ஸ்ட்ரக்ஷன்& பாலா டிரேடர்ஸ் உரிமையாளர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் இரண்டாவது தவணையாக விடுதலை சந்தா தொகை ரூ 31 ஆயிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் கழகத்தோழர்கள். (6.7.2024),
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி நடைபெறும் இரு சக்கர வாகன பேரணிக்கு முதல் குழு வாகன பயண செலவிற்கான தொகை ரூ. 5000த்தை திராவிட மாணவர் கழகம் சார்பாக திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூர பாண்டியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் க. அறிவுச்சுடர், தமிழ் பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக அமைப்பாளர் தா.பாலாஜி. (6.7.2024)
No comments:
Post a Comment