போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழி மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 12, 2024

போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழி மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறை திட்டம்

featured image

சென்னை, ஜூலை 12- சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் 4 வழி மேம்பாலப்பணிகள் தொடங்கி உள்ளது.

4 வழி மேம்பாலம்

சென்னை மாநகரின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று அண்ணா சாலை. இங்கு எப்போதும் போக்குவரத்து நெருக்கடி காணப்படும். இதற்கு நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான நெடுஞ் சாலை துறை மானிய கோரிக்கையில் சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, தேனாம் பேட்டையில் இருந்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பு,எஸ்.அய்.இ.டி.கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந் திப்பு, சி.அய்.டி. சாலை சந்திப் புகளை கடந்து சைதாப் பேட்டை வரை 3.20 கி.மீ. நீளமும்,14 மீட்டர் அகலமும் கொண்ட 4 வழித்தட உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட் டன.

இதற்காக ரூ. 621 கோடி நிதிக்கு ஒப்புதல் வழங்கப் பட்டு உள்ளது. நாள்தோறும் 2½ லட்சம் வாகனங்கள் செல் லும் வகையில் உயர்த்தப்பட்ட நான்கு வழிச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சுரங்கத்தின்மீது

முதல் பாலம்

இதன் மூலம் அண்ணா சாலையை கடக்க ஆகும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 5 நிமிடங்களாக குறைக்கப்படும். இந்த பாலம் மாதிரி 3டி முறையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நிறைவடைந்த உடன் எந்த போக்குவரத்து நெருக்க டியிலும் சிக்காமல் தேனாம் பேட்டையில் இருந்து சைதாப்பேட்டைக்கு 5 நிமிடத்தில் சென்றுவிட முடியும்.

அண்ணா சாலையின் கீழே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை செல்வதினால் சாலை யில் இருந்து வரும் அழுத்தம் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள், சென்னை அய்.அய்.டி. வல்லுனர் கள், இங்கிலாந்து மற்றும் ஜெர் மன் நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருடன் கலந்தாலோ சிக்கப்பட்டுஇந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இப்பணியை 24 மாதகாலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment