காஞ்சிபுரம். ஜூலை 7- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.7.2024 மாலை 6.00 மணியளவில் மாநகரச் செயலாளர் வேலாயுதம் இல்லத்தில் நடைபெற்றது. கூட் டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையேற்று உரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் பா.கதி ரவன் முன்னிலை வகித்து உரை யாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் பு. எல்லப்பன் நோக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி.அசோகன், மாவட்ட கழகச் செயலாளர் கி. இளையவேள், மாநகர கழகத் தலைவர் ந. சிதம்பரநாதன், மாநகர செயலாளர் ச. வேலாயுதம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இளம்பரிதி, வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் செல்வம், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் அ.ரேவதி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் பன்னீர் செல்வம் பங்கேற்று கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தீர்மானங்கள்:
13.7.2024 அன்று காஞ்சிக்கு வருகை தரும் நீட் எதிர்ப்பு பிரச்சார பயணத்தில் பங்கேற்று வருவோர்க்கு வரவேற்பும் தெருமுனைக் கூட்டமும் சிறப்பாக ஏற்பாடு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.
சுயமரியாதை இயக்க நூற் றாண்டை ஒட்டி காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய இரு ஊர்களில் கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பம் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் நல்ல உணவு வழங்கி சிறப்பு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. உண வுச் செலவை முழுமையாக ஏற்றுக் கொண்ட மாநகர திராவிடர் கழகத் தலைவர் ந. சிதம்பர நாதன் அவர்களுக்கு நன்றி தெரி விக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநகர செயலாளர் ச. வேலாயுதம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment