சென்னை, ஜூலை 11 – என்னை ரவுடி பட்டியலில் உள்ளவர் என்று நிரூபிக்க முடியுமா? இதுகுறித்து அண்ணாமலை மன்னிப்பு கேட்கா விட்டால் அவர்மீது அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 9.7.2024 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
அண்ணாமலை ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற போது அரசியல் பேசியிருக்கிறார். சாவு வீட்டுக்கு சென்று அரசியல் பேசுகிறார்.
ரவுடி பட்டியலில் என் (செல்வப்பெருந்தகை ) பெயர் இருப்பதாக அண்ணாமலை கூறு கிறார். உண்மைக்கு புறம்பாக பேசினால், ஆதாரம் இல்லாமல் பேசினால் என்ன சட்டம் பாயும் என்று தெரியுமா? எல்லா தலித் தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு எஸ்.சி. துறை ஆணையத் திடம் நாங்கள் புகார் கொடுக்க போகிறோம் என்று கூறுகிறார்கள். ஒருவேளை புகார் கொடுத்தால் அண்ணாமலை சிறைக்கு போவதை யாராலும் தடுக்க முடியுமா?
மனம் புண்படும்படி அவதூறாக பேசினால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமா, வராதா? என்னை ரவுடி பட்டியலில் உள்ளவர் என்று கூறுகிறார். எங்கேயாவது அதை நிரூபிக்க முடியுமா? அவர் பேசிய அவதூறு பேச்சுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று அவருக்கு தெரியாதா?.
அவதூறு வழக்கு
நீங்கள் பேசிய பேச்சுக்கு அரச மைப்புச் சட்டத்தில் முன்பிணை கிடைக்குமா? எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவர் மீது என்னென்ன சட்டங்களின் கீழ் அவதூறு வழக்கு போட முடியுமோ அத்தனை வழக்குகளையும் பதிவோம். இதை தமிழ்நாட்டோடு விடாமல் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் மக்களிடம் கொண்டு போவோம்.
பா.ஜனதாவில் 261 குற்றவாளிகள்…
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டதாக அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால், உளவுத் துறை தயாரித்துள்ள 32 பக்க அறிக்கையில் 261 குற்றவாளிகள் பா.ஜனதாவில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1,977 வழக்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கருநாடகாவில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்த போது என்ன நடந்தது என்பது பற்றி ஆய்வு பண்ண இருக்கிறோம். – இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோபண்ணா, பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர் ஜி.தமிழ்செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment