தருமபுரி, ஜூலை 11- ஊரகப் பகுதி மக்களும் பயன் பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத் தார்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் நாள்தோறும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் இதுவரை 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடி வெடுத்தது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். இத்திட்டம் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளில் 2,500 முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம், 15 அரசுத் துறைகளின் 44 சேவைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2024) காலை 10.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.
நெடுஞ்சாலை, பொதுப்பணி, பால் வளம், வனம், ஆதிதிராவிடர் நலன், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட துறைகள் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அரசின் பல் வேறு துறைகள் சார்பில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் 2,000 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
மகளிர் விடியல் பயண திட்டத் துக்காக, தருமபுரி மாவட்டத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் பேருந்து களுக்கு மாற்றாக 20 புதிய நகரப் பேருந்துகளின் இயக்கத்தையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றார். அங்கிருந்து காரில், தருமபுரி சென்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தருமபுரியில் ‘மக்களுடன் முதல் வர்’ திட்டம் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, பல்வேறு அரசுத் துறைகளின் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment