பெரியார் பெருந்தொண்டர் புலவர் பூ.முருகையன் நினைவேந்தலும் விடுதலை சந்தா அளிப்பும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

பெரியார் பெருந்தொண்டர் புலவர் பூ.முருகையன் நினைவேந்தலும் விடுதலை சந்தா அளிப்பும்

featured image

பேராவூரணி. ஜூலை 8– பட்டுக் கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் கல்லூரணி காடு பெரியார் பெருந்தொண்டர் புலவர் பூ..முருகையன் வயது முதுமையின் காரணமாக கடந்த 25.6.2024 அன்று இயற்கை எய்தினார்.

நினைவேந்தல் பட திறப்பு விழா 4.7.2024 அன்று நண்பகல் 12 மணி அளவில் கல்லூரணி காடு மு.அருள்குமரன் இல்லத்தில் மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும் மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப.சேகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு கவிஞர் பா.பாலசுந்தரம், பட்டுக்கோட்டை நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர், கல்லூரணி காடு ஊராட்சி மன்ற தலைவர் வே. சுந்தர்ராஜன் முன்னிலையில் அண்ணா திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் புலவர் முருகையன் மாணவருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் புலவர் முருகையன் படத்தினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து புலவர் முருகையன் அவர்களின் மகள் சற்குணம் இரங் கல் கவிதை படித்தார். பெரியாரிய சிந்தனையாளர் சித.திருவேங்கடம் சேதுபாவா சத்திரம் ஒன்றிய கழக தலைவர் சி.ஜெகநாதன் ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆசிரியர் குமணன் பட்டுக் கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இரத்தின சபாபதி திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி ஆகி யோர் நினைவேந்தல் உரைக்கு பின்னால் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் புலவர் முருகையன் அவர்களின் சிறப்பு மற்றும் நாம் இறந்ததற்கு பின்னால் கூட புரோகிதம் என்கின்ற பெயரால் பார்ப்பனர்களிடம் எவ்வாறு எல்லாம் ஏமாறுகிறோம் என்பதை மிகத் தெளிவாக விளக்கி உரையாற்றினார்.

நிகழ்வில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூ ரணி இரா.நீலகண்டன், மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன் பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி நகர கழக தலைவர் சி.சந்திரமோகன் சேதுபாவா சத்திரம் ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் சு.வசி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் சு.சதீஷ்குமார், கல்லூரணி காடு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மேனாள் தலைவர் கண்ணன், கருணாநிதி, திருச்சிற்றம்பலம் மாரிமுத்து, இளங்கோ, ஜெகதீசன், பிரகாஷ் உட்பட ஏராளமான தோழர்களும் உறவினர்களும் கலந்து கொண்டு புலவர் அவர்களின் நினைவேந்தலில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்

புலவர் முருகையன் அவர்களுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் அருமை கண்ணு தர்மலிங்கம் (அருமை கண்ணு என்ற பெயர் தந்தை பெரியார் அவர்களால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது) அருட்செல்வி காந்தி, சற்குணம் ஜெய்சங்கர், அருள்மொழி சந்திரமோகன், லோக லெட்சுமி ஜான் கே.டில்லி என்ற மகள்களும், அருள் குமரன் ஜான்சி ராணி என்ற மகனும் உள்ளனர். நினைவேந்தலை ஒட்டி ஓராண்டு விடுதலை சந்தா மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களிடம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment