சீர் மரபிரர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

சீர் மரபிரர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

featured image

சென்னை, ஜூலை 8- தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம், தமிழ்நாடு அரசால் சிறப்பான முறையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில்,

1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் உதவித் தொகை

2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை

3. இறுதி நிகழ்வுச் சடங்கு செலவிற்கான உதவித்தொகை

4. கல்வி உதவித்தொகை

5. திருமண உதவித்தொகை

6. மகப்பேறு உதவித்தொகை

7. மூக்கு கண்ணாடி செலவுத்தொகையை ஈடு செய்தல்

8. முதியோர் ஓய்வூதியம்

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வய துக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவ னங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாயக் கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மழைக்கு 13 பேர் பலி

லக்னோ, ஜூலை 8- 24 மணி நேரத்தில் கடும் மழை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 45 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாக நிவாரணத் துறை தெரிவித்துள்ளது.

இதில் சரவஸ்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 65.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக நிவாரணத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5.7.2024 மாலை 6:30 மணி முதல், 6.7.2024 மாலை 6:30 மணி வரை ஃபதேபூரில் மின்னல் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ரேபரேலி மாவட்டத்தில், மின்னல் தாக்கி ஒருவரும், மழை தொடர்பான சம்பவத்தில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.

மேலும் புலந்த்ஷாஹர், கன்னோஜ், மெயின்புரி, கவுசாம்பி, ஃபிரோசாபாத், பிரதாப்கர், உன்னாவ் மற்றும் மைன்புரி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம் பவங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.. இங்கு மழை தொடர்வதால் மீட்புப் பணிகள் தீவிர்மாக்கபட்டுள்ளன.

No comments:

Post a Comment