சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (6.7.2024) நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சையத் அசினா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, நிர்வாகிகள் சுசீலா கோபாலகிருஷ்ணன், மலர்கொடி, ஆலிஸ் மனோகரி, கோமதி, பூங் கொடி, தாரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பா.ஜ. ஆட்சியில் மணிப்பூர் கலவரம் உள்பட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இந்த போக்கை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உடனடியாக ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய பிறகு நாடு முழுவதும் இதற்கான கவனம் அதிகரித்துள்ளது.
எனவே நீட் தேர்வு குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும். வாக்குச்சாவடி அளவில் தொடங்கி காங்கிரஸ் அமைப்புகளில் பெண்களை உருவாக்குவதற்கான தீவிரமான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.
No comments:
Post a Comment