ஷில்லாங், ஜூலை 9 வங்கதேசத்து அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் விடயத்தில் மிசோரமின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளு மாறு கூறியுள்ள மிசோரம் –- முதலமைச்சர் லால்துஹோமா அவர்களது நாட்டுக்குள் அவர்களை திருப்பியனுப்ப முடியாது என்று அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மிஸோ இன மக்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர். பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு முதலமைச்சர் லால்து ஹோமா வெளியிட்ட அறிக் கையில் இந்தியா மற்றும் வங்கதேச எல்லையிலுள்ள சிட்டகாங் மலைப்பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள ஸோ இன மக்களை எனது அரசு அவர்களது நாட்டுக்குள் திருப்பித் தள்ளவோ, நாடு கடத்தவோ முடியாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பழங்குடி மிசோ இனத்தில் ஒன்றான பாம் பழங்குடியின மக்கள் கடந்த 2022-ஆண்டு முதல் மிசோரமில் தஞ்ச மடைந்துள்ளதாகவும், மேலும் பலரும் மாநிலத்துக்குள் நுழைய முயற்சித்து வருவதாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் தெரிவித்தார். குக்கி-சின் இன பழங்குடி மக்கள் மீது வங்கதேச ராணுவம் நடத்தியத் தாக்குதலால் நவம்பர் 2022 முதல் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களை மனிதாபிமான ரீதியில் மிசோரம் அரசு பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்புவோம் என்று மோடி – அமித்ஷா தேர்தல் நேரத்தில் பேசி இருந்தனர். மேலும் குடியுரிமைதிருத்தச் சட்டத்தின் படி அவர்களை திருப்பி அனுப்பவேண்டும் என்று உள்துறை செயலகமும் கூறிவந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் ஒன்றிய அரசின் உத்தரவைவிட மனிதாபிமான நடவடிக்கை முக்கியமானது என்ற முடிவிற்கு வந்துள்ளார்.
No comments:
Post a Comment