தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.7.2024) சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, அ.வெற்றியழகன், ஏஎம்வி பிரபாகர ராஜா, துணை மேயர் மு.மகேளஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment