
நீட் தேர்வை ரத்துசெய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா 11.7.2024 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள், தோழர்களை பேரணியில் பங்கேற்க வைத்தல் மற்றும் விடுதலை நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு பணிகளை திராவிடர் கழக குமரிமாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், கன்னியாகுமரி நகர கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் மற்றும் தோழர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேரணி அனுமதி பெற கடிதம் கொடுத்தல், தோழர்கள் தங்குவதற்காக இடம் ஏற்பாடு செய்தல் மற்றும் பேரணிக்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் மும்முரமாகச் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment