‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று என்அய்டி, அய்அய்டிகளில் சேரும் மாணவ, மாணவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று என்அய்டி, அய்அய்டிகளில் சேரும் மாணவ, மாணவிகள்

முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, ஜூலை 13- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டமானது கடந்த 1.3.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது ஈராண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் அய்அய்டி, என்அய்டி போன்ற இந்தியா வின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் கல்வி கற்றிட ஏதுவாக ஜேஇஇ நுழைவு தேர்விற்கு “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அய்அய்டி, என்அய்டி போன்ற முன்னணி கல்வி நிலையங்களில் சேர்க்கை பெற்று வருவதையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவில்,
‘‘என்னருந் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி “நான் முதல்வன்” என்று இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment