சென்னை, ஜூலை 7– ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க., வழக்குரைஞர்கள் நேற்று முன்தினம் (5.7.2024) காலையில் போராட்டம் நடத்தினர். தி.மு.க., சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வழக்குரை ஞர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, இந்த 3 சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வழக்குரைஞர்கள் முழக்கமிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங் களும் இல்லாமல், எதேச்சதிகாரமாக இந்த 3 சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு எப்படி அரசியல் அமைப்புக்கு விரோதமாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரானவையாக உள்ளவை. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார்.
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந் துள்ள 3 புதிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment