திருச்சி, ஜூலை12- திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தொலைபகுதி வண்ணாடு ஊராட்சி சின்ன இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி, அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி யில் பிளஸ்-2 வரை படித்து அரசு இறுதித் தேர்வில் 423 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து பொறியியல் படிக்க ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுதினார். இதில் மாணவி ரோகிணி 73.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.அய்.டி.) படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவருடன் சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யாவும் தேர்ச்சி பெற்று திருச்சி என்.அய்.டி.யில் புரடக்ஷன் என்ஜினீயரிங் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.அய்.டி.யில் படிக்க இடம் கிடைத்த முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment