தேசிய அளவிலான இதயநோய் வல்லுநர்கள் இணைந்து, புதிய சுண்டுபிடிப்புகளுக்கான தனி மய்யத்தை, சென்னையில் துவக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தேசிய இன்டர் வென்ஷனல் கவுன்சில், இந்திய இதயவியல் நல அமைப்பின் தமிழ்நாடு பிரிவு ஆகியவை இணைந்து, இதய நோய் சிகிச்சை மேம்பாடு குறித்த, நான்கு நாள் தேசிய மருத்துவ மாநாட்டை சென்னையில் 5.7.2024 துவக்கின.
மாநாட்டில், தேசிய இன்டர் வென்ஷனல் கவுன்சில் செயலர் கேசவமூர்த்தி பேசியதாவது:
மாநாட்டில், 3,000க்கும் மேற்பட்ட இதய நிபுணர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுதும், 1,700க்கும் மேற்பட்ட மருத்துவனைகளில் பெறப்பட்ட, மருத்துவ சிகிச்சைமுறை குறித்த தரவுகள், மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
இதயவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக, பிரத்யேக மய்யம் சென்னையில் துவக்கப்பட உள்ளது. இந்த மய்யம் வாயிலாக, நவீன முறையில் பாதிப்புகளை கண்டறியவும், சிகிச்சை கிடைக்கவும் ஊக்கப்படுத்தப்படும்.
– இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment