பேராவூரணி சேது பாவாசத்திரம் ஒன்றிய நகர கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 11, 2024

பேராவூரணி சேது பாவாசத்திரம் ஒன்றிய நகர கழக கலந்துரையாடல் கூட்டம்

featured image

பேராவூரணி, ஜூலை11- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர கழக கலந்துரையாடல் கூட்டம் 24.6.2024 அன்று மாலை 5 மணி அளவில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழக மாநில கிராமப்புற பிரச் சார குழு அமைப்பாளர் தலைமை கழக அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழ கன் தலைமையிலும். பட் டுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை..சிதம்பரம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி முன்னிலையிலும், கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் கடவுள் மறுப்பு கூறிட சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக இளைஞர் அணி தலைவர் சு..வசி வரவேற்புரை ஆற்றிட நடைபெற்றது.

கூட்டத்தில், கழக செயலவை தலைவர் சு. அறிவுக்கரசு, பட்டுக்கோட்டை கழக மாவட்ட துணைத் தலைவர் சா.சின்னக்கண்ணு, மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன் அவர்களின் தாயார் மீனாள் ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அவர்களின் தொண்டிற்கு வீரவணக்கம் செலுத்துகின்றது எனவும்,
பேராவூரணி சேதுபாவாசத் திரம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் ஊராட்சிக்கு ஒரு கூட்டம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழாவாக கொண்டாடுவது என இக்கூட் டம் முடிவு செய்கிறது எனவும்,
தலைமை கழகத்தால் பேராவூரணி சேது பாவா சத்திரம் ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதலை சந்தா இலக்கினை கூடிய விரைவில் முடித்துக் கொடுப்பது எனவும்,
விடுதலை வாசகர் வட்ட நிகழ்வினை சற்றும் தொய் வில்லாமல் வாசகர் வட்ட அமைப்பாளர் அ.திருப்பதி முன்னெடுப்புடன் மாதத்தின் ஒவ்வொரு முதல் சனிக்கிழமை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள்
பேராவூரணி நகர திராவிடர் கழக தலைவர் சி..சந்திரமோகன் நகர கழக செயலாளர் த.நீலகண்டன் என தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளுக்கு கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து சிறப்பாக செயல்பட ஊக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன் பேராவூரணி ஒன்றிய கழக தலைவர் மு.தமிழ்செல்வன் சேது பாவாசத்திரம் ஒன்றிய கழகத் தலைவர் சி.ஜெகநாதன் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குறிச்சி கனக.இராமச்சந்திரன் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் சு.மூர்த்தி சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சு.சதீஷ்குமார் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
பேராவூரணி சேது பாவாசத்திரம் ஒன்றிய கிரா மப்புறங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் கூட்ட பட்டியல் விபரம் கீழ்க்கண்டவாறு
ஜூலை – அஅம்மையாண்டி, பள்ளத்தூர்
ஆகஸ்ட் – வலப்பிரமண்காடு, கரிசவயல்
செப்டம்பர் – கொன்றைக்காடு, உடையநாடு
அக்டோபர் – சித்தாக்காடு, ரெட்டவயல்
நவம்பர் – ஒட்டங்காடு, பூக்கொல்லை
டிசம்பர் – திருச்சிற்றம்பலம், மல்லிப்பட்டினம்

No comments:

Post a Comment