வாயால் வடை சுடும் அண்ணாமலை! பி.ஜே.பி. பற்றி எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 7, 2024

வாயால் வடை சுடும் அண்ணாமலை! பி.ஜே.பி. பற்றி எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

கோவை, ஜூலை 7- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித் துள்ளார்.

வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இதனை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

அதிமுக போட்டியிட்டு இருந் தால் 3ஆவது, 4ஆவது இடம் தான் பிடித்து இருக்கும் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். இந்த விமர்சனங்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்து களை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந் தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் புறக்கணிப்பு என ஏற்கனவே அறிவித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்து விட்டோம். அப்படி இருக்கையில் பாஜக மாநில தலைவர் அண்ணா மலை அதிமுகவை குறைசொல்லி, திட்டமிட்டு பேசியிருக்கிறார்.

அதிமுக போட்டியிட்டு இருந்தால் 3ஆவது 4ஆவது இடம் பெற்றுஇருக்கும் என தெரிவித்து இருக்கிறார். அவர் ஒரு அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.

அண்ணாமலை பதவியேற்றப் பிறகு தான் பாஜக வளர்கிறது என்ற பிம்பத்தை அவர் உருவாக்க பார்க்கிறார். கடந்த 2014 தேர்த லில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு இருந்தார். அவர் 42,000 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார்.

ஆனால் அதே தொகுதியில் 2024இல் அண்ணாமலை போட்டி யிட்டு திமுக வேட்பாளரை விட சுமார் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார். 2014இல் பாஜக வாக்கு சதவீதம் 18.80 ஆகும். 2024இல் 18.28 ஆக குறைந்துள்ளது.

தினமும் பேட்டி கொடுத்து அண்ணாமலை தன்னை அடை யாளப்படுத்தி வருகிறார். மாநில தலைவராக இருந்து என்ன புதிய திட்டம் தமிழ்நாட்டிற்கு என்று கொண்டு வந்தார்? கோவையில் 100 வாக்குறுதிகள் 500 நாளில் நிறைவேற்றம் செய்யப்படும் என பொய் சொல்லி தான் கோவையில் இவ்வளவு வாக்குகள் பெற்றார்.

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். ஒன்றியத்தில் பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. முடிந்தால் அந்த 100 வாக்குறுதிகளை நிறைவேற்ற செய்யுங்கள். கடந்த முறை 300 இடங்களை வென்று தனியாக ஆட்சியை பிடித்த பாஜக, இம்முறை இப்படிப்பட்ட மாநில தலைவர்களால் தான் சறுக்கி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் முதுகில் குத்திய எடப்பாடி அண்ணாமலை கடும் தாக்கு

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ லில் விக்கிரவாண்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவின் தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக கரைந்து செல்லத் தொடங்கி விட்டனர்.

கறையான் போல் அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது. ஓரிரு வரை பேச வைத்து அதிமுகவை காப்பாற்றி விடலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். பழனிசாமி உள்ளிட்ட 3 பேரின் சுய லாபத்துக்காக செய்யும் அரசியலால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2019ஆம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை சந்திக்கிறது. தலைமை சரியில்லாததால் அதிமுக பல இடங்களில் வைப்புத் தொகையை இழந்துள்ளது. அதிமுக கோட்டை எனக் கூறும் கோவையில் 3 சட்ட மன்ற தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்தது. கோவையில் அதிமுகவை விட 2 மடங்கு வாக்கு கள் பாஜக பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்ணாடி எடுத்து அவர் முகத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி கண்ணாடியை நன்றாக பார்த்து கொண்டால், கண்ணாடி எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை சொல்லும்.

எடப்பாடி பழனிசாமி தயவு செய்து எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். எடப்பாடி பழனிசாமி பாஜகவை தவறாக பேசியதற்கு மாநிலத் தலைவர் என்ற முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். கோவையில் 13 ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வைப்புத் தொகையை வாங்கி தப்பிவிட்டு எடப்பாடி வீரவசனம் பேசுகிறார்.

கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 சட்டமன்ற உறுப் பினர்கள் அதிமுகவினர்தானே; ஏன் வாக்கு சதவீதம் 17-ஆக குறைந்தது. அதிமுகவை கண்முன்னால் அழித் துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிகிறது. சுயலாபத்திற்காக, அதிகார வெறிக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமை சரியில்லாததால்தான் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment